காதலனுக்கு ஜூஸில் விஷம்?.. கைதான இளம்பெண் கோர்ட்டில் சொன்ன விஷயம்.. குழம்பிப்போன போலீஸ்.. திடீர் திருப்பம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் தனது காதலனுக்கு இளம்பெண் ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சி கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Also Read | "எனக்கு என்ன நடந்துச்சோ.. அவங்களுக்கும் அது நடக்கணும்".. பாக். பவுலருக்கு ரிஸ்வான் போட்ட ஆர்டர்.. வீடியோ..!
கன்னியாகுமரி - கேரள மாநில எல்லையில் பாறசாலை என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது 23). இவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கிரீஷ்மா வீட்டிற்கு சென்றிருந்த அவரது காதலன் ஷாரோன் ராஜ், வீட்டிற்கு வெளியே வந்த பிறகு வாந்தி எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது அவருடன் இருந்த நண்பர் இதுபற்றி கேட்டதாக கூறப்படும் நிலையில், ஷாரோன் ராஜ் எதுவும் தெளிவாக சொல்லவில்லை என தெரிகிறது. பின்னர், வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜின் உடல் நிலையும் மோசமாகி உள்ளது. இதன் பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அவரது உடல்நிலை இன்னும் மோசம் ஆகவே திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி ஷாரோன் ராஜ் உயிரிழந்தார். இதனையடுத்து ராஜின் தந்தை போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து கிரீஷ்மா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்தனர் காவல்துறையினர்.
அப்போது இதனை கிரீஷ்மாவின் குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர். ஆனால், ஷாரோனின் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியானவுடன், கிரீஷ்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என சொல்லப்பட்டதாகவும், அதனாலேயே கிரீஷ்மா இப்படி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நெய்யாற்றின்கரை குற்றவியல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் கிரீஷ்மா. அப்போது தான் இந்த கொலையை செய்யவில்லை எனவும் காவல்துறையினர் வேண்டுமென்றே இந்த வழக்கை தன்மீது திணித்துள்ளதாகவும் கூறினார். மேலும், போலியான ஆதாரங்களை போலீசார் உருவாக்கியதாகவும் மாஜிஸ்திரேட்டிடம் இளம்பெண் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், இளம்பெண் கிரீஷ்மா விசாரணையின்போது அளித்த வாக்குமூலத்தின் முழுநீள வீடியோ தங்களிடத்தில் இருப்பதாகவும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து, விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளம்பெண், நீதிமன்றத்தில் தான் இந்த கொலையை செய்யவில்லை என வாக்குமூலம் அளித்திருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்