'காருக்குள்ள ரகசிய அறை...' இடையில சொன்ன 'ஒரு வார்த்தை'யால கெடச்ச க்ளூ...! - ஒப்பன் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் மலப்புரம் பூக்கோட்டூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான அப்துல் சலாம் (50) தன் கார் டிரைவர் சம்சுதீன் (45) உடன் கடந்த 25-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பாலக்காடு ரோடு நவக்கரை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி ரூ.27 லட்சத்தை பறித்ததோடு,காரையும் பறித்து கொண்டு தப்பியுள்ளது.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து அப்துல் சலாம் அளித்த புகாரின் பெயரில் க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் நேற்று முன்தினம் கோவை சிறுவாணி ரோடு மாதம்பட்டி அருகே அப்துல் சலாமின் கார் இருப்பதாக அப்துல்சலாமிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கார் கிடைத்து விட்டதென தெரிந்தவுடன் கொள்ளை போன பணம் கூட வேண்டாம், காரை மட்டும் உடனடியாக தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என அப்துல் சலாம் கேட்டார். அவரின் இந்த செயலால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் உள்ளே சோதனையிட்ட போது நான்கு இடங்களில் சிறுசிறு ரகசிய அறைகள் அமைத்து அதில் ரூ.90 லட்சத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
ரூ.90 லட்சம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்துல் சலாம் பணம் என்னுடைய அல்ல எனவும், மலப்புரத்தை சேர்ந்த நகை வியாபாரி முகமது அலிக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார். அதையடுத்து முகமது அலியை போலீசார் விசாரித்த போது அது என் பணம் அல்ல என கூறி விட்டார். இதையடுத்து அப்துல் சலாம் மீது பொய்யான தகவல் கூறி மோசடி செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் காரை பறிகொடுத்த அப்துல் சலாம் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், 'இது ஹவாலா பணம் தான். பணத்தை ஒப்படைத்தால் 10 சதவீத கமிஷன் கிடைக்கும்.வழக்கமாக பந்திப்பூர், முதுமலை வழியாக கேரளா செல்வேன். இரவு 9 மணிக்கு பிறகு வனப்பகுதி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவை வழியாக சென்றேன். என்னை கத்தியை மிரட்டி கும்பலை நான் இதுவரை பார்த்ததில்லை. அவர்கள் என்னிடமிருந்து 27 லட்ச ரூபாயை பறித்து தப்பினர்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி துறையினரும் பணம் தொடர்பாக விசாரித்து, காரில் இருந்த ரூ.90 லட்சம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்