'கேரளாவில் பயமுறுத்தும் எண்ணிக்கை'... 'கையை மீறி செல்கிறதா'?... புதிய கட்டுப்பாடுகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தக் கேரளா அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

'கேரளாவில் பயமுறுத்தும் எண்ணிக்கை'... 'கையை மீறி செல்கிறதா'?... புதிய கட்டுப்பாடுகள்!

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முடியாத நிலையில் கேரளாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தக் கேரளா அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.

Kerala relaxes Covid curbs: Shops can open for 6 days

கடந்த மாதம் 27ம் தேதி முதல் தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி வரை ஆறுநாட்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 20,000-த்தை தாண்டியிருக்கிறது. நேற்று 1.90 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 23,676 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவை நியமித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் கேரள முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

Kerala relaxes Covid curbs: Shops can open for 6 days

அதன்படி, நாளை முதல் காலை ஏழு மணி முதல் இரவு 9மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்