டிக்கெட் இல்லைன்னா இப்படி உதைப்பிங்களா..? - ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த நபரை கண்மூடித்தனமாக எட்டி உதைந்த போலீஸ் அதிகாரிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்ததாகக்கூறி ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் சரமாரியாக எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்வினைகளைக் கிளப்பியுள்ளது.
எட்டி உதைத்த அதிகாரி
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாவலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம் காவல்துறை அதிகாரி டிக்கெட்டை காண்பிக்கும்படி கேட்டிருக்கிறார். அந்நபர் டிக்கெட்டை காண்பிக்காததால் ஆத்திரமடைந்த காவல்துறை அதிகாரி அவரை எட்டி உதைந்துள்ளார்.
இதனால் கீழே விழுந்த அந்நபரை மேலும் சரமாரியாக எட்டி உதைத்திருக்கிறார் அந்த காவல்துறை அதிகாரி. சக காவலர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அருகில் இருந்து இதனை வேடிக்கை பார்ப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்கப்பட்ட பயணி மது போதையில் இருந்ததாகவும் பயணிகள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
வலுக்கும் கண்டனங்கள்
இதனையடுத்து கேரள பாஜக தலைவர் சுரேஷ் ஆளும் பினராயி விஜயன் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை குற்றவாளிகளை விட்டுவிட்டு சாதாரண மக்களிடம் தங்களது அதிகாரத்தினைக் காட்டுகின்றனர். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், அவரைத் தாக்கியது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, கண்ணூரில் கண்டன ஊர்வலம் ஒன்றினையும் நடத்திய கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் சதீஷ், பயணியைத் தாக்கிய காவல்துறை அதிகாரி மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
நள்ளிரவு ‘முகமூடி’ அணிந்து வந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-ல் பதிவான காட்சி.. அச்சத்தில் வியாபாரிகள்..!
சஸ்பென்ட்
இதுபோல, சமூக வலைத்தளங்களிலும் காவல்துறை அதிகாரிக்கு எதிராக மக்கள் திரளவே, சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பென்ட் செய்திருக்கிறது கேரள காவல்துறை.
விசாரணையில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்துவந்த பிரமோத் என்னும் அதிகாரி தான் பயணியைத் தாக்கியது எனத் தெரியவந்திருக்கிறது. சம்பவம் நடந்தன்று கண்ணூர் ரயில் நிலையத்தில் ஏறிய பிரமோத், ஏறியதாகவும் சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, கடந்தவாரத்தில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் கேரள அரசு உரிமம் பெற்ற மதுபானக்கடையில் இருந்து வாங்கிய மதுபானத்தை காவல்துறை அதிகாரிகள் சிலர் கீழே ஊற்றிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்