Couple Sharing குழு வழக்கு.. '14 ஆயிரம்' ரூபா குடுத்து.. இந்த தப்ப வேற பண்ணிருக்காங்க.. தோண்டி பார்த்ததில் கிடைத்த 'ஷாக்' ரிப்போர்ட்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா : 'Couple Sharing' குழு மூலம், பணத்திற்காக மனைவிகளை கைமாற்றி வந்தது தொடர்பான வழக்கில், தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Couple Sharing குழு வழக்கு.. '14 ஆயிரம்' ரூபா குடுத்து.. இந்த தப்ப வேற பண்ணிருக்காங்க.. தோண்டி பார்த்ததில் கிடைத்த 'ஷாக்' ரிப்போர்ட்

கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன், காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், தனது கணவர் தன்னைக் கட்டாயப்படுத்தி, மற்ற சில ஆண்களுடன் உறவில் ஈடுபட வேண்டி வற்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். அந்த பெண்ணின் புகாரின் பெயரில், போலீசார் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர்.

'Couple Sharing' குழு

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் கணவர் மற்றும் சில நண்பர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட கேரள மாவட்டங்கள் சிலவற்றில், தங்களது மனைவிகளை, ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ளும் குழு ஒன்று இருப்பது தெரிய வந்தது.

kerala new information about couple sharing group reports

உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தொடர்பு?

டெலிகிராம் மற்றும் மெசஞ்சர் செயலிகள் மூலம், பலர் ஒரு குழுவாக இணைந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் மூலம் இணைந்து கொள்பவர்கள், நேரில் சந்தித்து, பணத்திற்காக தங்களின் மனைவிகளை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல, கேரளாவில் சில உயர் பொறுப்பை சேர்ந்தவர்களுக்கும்  இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி தகவல்

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இது சம்மந்தப்பட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல், இன்னும் சிலரைப் போலீசார் தேடி வருகின்றனர். அதில் ஒருவர் தப்பித்து, வெளிநாடு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த 'Couple Sharing' குழு பற்றி,  தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

kerala new information about couple sharing group reports

திருமணம் ஆகாதவர்களும் தொடர்பு

அதாவது, திருமணமானவர்கள் மட்டுமே இந்த குரூப் மூலம் தவறான முறைகேடு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், திருமணம் ஆகாத சிலரும் பணம் கொடுத்து, சிறப்பு அனுமதியுடன், குழு மூலம் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற தகவலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, இவர்கள் ஒருமுறை, சுமார் 14,000 ரூபாய் வரை செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

kerala new information about couple sharing group reports

விசாரணை வளையத்தில் 6000 பேர்?

இந்த சம்பவம், கேரளாவிலுள்ள சில வீடுகளில் மட்டுமில்லாமல், அங்குள்ள ரிசார்ட்டுகள், சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, சில ரிசார்ட்டுகள், மனைவிகளை மாற்றும் குழுவிற்காக மட்டுமே செயல்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் மட்டுமில்லாமல், வேறு சில மாநிலங்களில் இருந்து இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் என மொத்தம் 6000 பேர் வரை, இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் வெளியான தகவல், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட அனைவரையும் கண்டுபிடித்து, விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வர, போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

COUPLE SHARING, KERALA, INVESTIGATION

மற்ற செய்திகள்