நான்கு வருசமா பாதியிலேயே கிடக்கும் வீடு?.. "சொந்த ஊருக்கு போயிட்டு வரேன்னு சொன்னவரு".. திகிலூட்டும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் வீடு கட்டி வந்த நபர் ஒருவர், அதன் பணிகளை அப்படியே விட்டு விட்டு சென்று இன்னும் திரும்பி வராத சூழலில் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ள சம்பவமும், அதன் பின்னால் உள்ள பல்வேறு பரபரப்பு தகவல்களும் இணையத்தில் அதிகம் வலம் வந்த வண்ணம் உள்ளது.

நான்கு வருசமா பாதியிலேயே கிடக்கும் வீடு?.. "சொந்த ஊருக்கு போயிட்டு வரேன்னு சொன்னவரு".. திகிலூட்டும் பின்னணி!!

Also Read | "நான் நம்புற மனுஷன கண்டுபுடிச்சுட்டேன்".. தன்னை விட 13 வயது குறைவான நபரை திருமணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி!!

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் புதிய மனை வாங்கி வீடு ஒன்றைக் கட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த புது வீடுகளுக்கான பணிகள் ஆரம்பித்து சுமார் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில் இந்த வீடை அப்படியே விட்டு விட்டு, சொந்த ஊர் போய் வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார் சந்திரன். ஆனால் நான்கு ஆண்டுகளாக சந்திரன் அங்கே திரும்பி வரவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. ஏறக்குறைய வீட்டின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் நான்கு ஆண்டுகளாக அதனை கட்டி வந்த சந்திரன் என குறிப்பிடும் நபர் திரும்பி வராதது, அப்பகுதி மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் இந்த வீடு தொடர்பாக புகார் ஒன்றையும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் சேர்ந்த சந்திரன் யார் என்பது பற்றியும் அவர்கள் நான்கு ஆண்டுகளாக திரும்பி வருவதற்கான காரணங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது. ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கும் புதிய வீட்டின் வேலையையும் பணிகளை அப்படியே நிறுத்தி விட்டு நான்கு ஆண்டுகளாக திரும்பி வராத நபர் குறித்த செய்தி தற்போது அதிக பரபரப்பை அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தி உள்ளது.

Also Read | வங்கிக்கு அடியில் இருந்த ரகசிய சுரங்கம்?.. விசாரிக்க வந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!.. திடுக்கிடும் பின்னணி!!

KERALA, NEW HOUSE, POLICE, POLICE ENQUIRY

மற்ற செய்திகள்