2-வது முறையாக 'கடித்த' விஷப்பாம்பை... தோண்டி எடுத்து 'பிரேத' பரிசோதனை... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண் மரணம் தொடர்பாக புதைக்கப்பட்ட பாம்பை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் அஞ்சேல் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உத்ரா அடுத்தடுத்து 2 முறை பாம்பு கடித்து சமீபத்தில் உயிரிழந்தார். மாநிலத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் மற்றும் பாம்பாட்டி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2-வது முறையாக உத்ராவை கடித்த பாம்பை தோண்டி எடுத்து நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பாரன்ஸிக் நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். பாம்பின் உடல் அழுகிய நிலையில் இருந்தாலும் விஷப்பல் உள்ளிட்ட வழக்குக்குத் தேவையான பாகங்கள் சேகரிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பாகங்கள் சோதனைக்காக ஃபாரன்சிக் லேப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்