'தூக்கிட்டபடி தாயின் மர்ம மரணம்'.. 'ரயிலில் பாய்ந்து மகன் தற்கொலை'.. உலுக்கிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் கல்லூரி விரிவுரையாளரான 27 வயது மகனும், அவரது 55 வயது தாயும் டெல்லி புத்தம் பிரா பகுதியில்  வைத்து வந்தனர். இவர்களுள் தாய் லிஸி என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'தூக்கிட்டபடி தாயின் மர்ம மரணம்'.. 'ரயிலில் பாய்ந்து மகன் தற்கொலை'.. உலுக்கிய சம்பவம்!

அவரின் சடலத்தை மீட்கும்போது போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது லிஸியின் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை அடுத்து, அவரது இறப்புக்கும் அவரது மகனான ஆலன் ஸ்டான்லிக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டான்லியைத் தொடர்பு கொள்ள போலீஸார் முயற்சித்தபோது, அவர் ரயில் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அங்கிருக்கும் போலீஸார் தெரிவித்துள்ளனர். லிஸியின் மரணம் கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் கேரளாவின் இடுக்கியைச் சேர்ந்த லிஸியின் முதல் கணவர் கடந்த 2014-ஆம் ஆண்டு இறந்த நிலையில், லிஸி ஜான் வில்சன் என்கிறவரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஜானும் சில நாட்களில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து ஜானின் முதல் மனைவியின் பிள்ளைகள், அவரது மரணத்தில் லிஸியின் குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும், அவரது சொத்துக்களை லிஸி அபகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில்தான் 2 மாதங்களுக்கு முன்பு, தன் மகன் ஆலனுடன் டெல்லிக்கு வந்து லிஸி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கல்லூரி ஒன்றின் ஆராய்ச்சிப் படிப்பு விரிவுரையாளராக ஸ்டான்லி இருந்து வந்தார்.

ஆனால் லிஸி இறந்து கிடந்த வீட்டில் மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்தது அதில், தன் கணவர் ஜானின் உயிரிழப்புக்கு தான் காரணம் இல்லை என்றும், தன்னையும் தன் மகனையும் தவிர பத்திரிகையாளர்கள் உட்பட 12 பேர் ஜானின் உயிரிழப்புக் காரணம் என்றும் லிஸி குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜானின் குடும்பத்தினர் கொடுத்த துன்பமே தனது தற்கொலைக்கு காரனம் என்றும் எழுதியிருக்கிறாஅர். ஆனால் இதுபற்றி பேசியுள்ள ஆலன் ஸ்டான்லியின் நண்பன், ஆலனும் லிஸியும் மனமுடைந்து போய் இருந்ததாகவும், ஆனாலும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் கூறியதோடு ஆனால் கடைசியில் இருவரும் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் உருக்கமாகக் கூறியுள்ளார்.

SUICIDEATTEMPT, KERALA, MOTHER, SON, BIZARRE