தலைக்கு மேல கடன்.. வீட்டை வித்துடுலாம்ன்னு ரெடி ஆன தம்பதி.. சரியா 2 மணி நேரத்துக்கு முன்னாடி நடந்த 'அதிசயம்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிக கடன் காரணமாக, ஆசை ஆசையாக கட்டிய வீட்டை விற்க சில மணி நேரங்கள் இருந்த போது, நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
Also Read | லாட்டரியில்.. 1 லட்சம் டாலர் பரிசு.. "ஆனா, அதுக்கு முன்னாடி.." இன்ப அதிர்ச்சியில் உறைந்த பெண்
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாவா. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் அமினா.
இந்த தம்பதியருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முகமது பாவா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சுமார் 2000 சதுர அடி அளவில், வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.
இதற்காக, சுமார் 10 லட்சம் ரூபாய், வங்கியில் கடன் எடுத்துள்ளார். அது போக, உறவினர்களிடம் இருந்து சுமார் 20 லட்சம் ருபாய் வர முகமது பாவாவின் குடும்பத்தினர் கடன் வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கும் நிலையில், தங்களின் இரண்டாவது மகளின் கல்யாணத்தையும் சமீபத்தில் அவர்கள் முடித்துள்ளனர்.
இதனால், மொத்தம் 45 லட்சம் ரூபாய் கடன், முகமது பாவா குடும்பத்தினருக்கு உருவாகி உள்ளது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவும் முகமது பாவாவால் முடியாமல் போனதால், கடந்த சில மாதங்களாக அவரும், அவரது மனைவி அமினாவும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதனால், தங்கள் ஆசை ஆசையாக கட்டிய வீட்டை விற்கவும் முகமது பாவா முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தங்களின் வீட்டை சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு விலை பேசிய பாவா, கடந்த சில தினங்களுக்கு முன், மாலை 5 மணியளவில் தன்னுடைய வீட்டை வாங்கும் நபரை பணத்துடன் வர சொல்லி இருந்தார். அப்படி இருக்கும் நிலையில், அதே நாள் மதிய வேளையில் வெளியே சென்ற முகமது பாவா, வரும் போது ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார்.
தெடர்ந்து, அன்று மாலை 3 மணியளவில்; லாட்டரி முடிவுகளை பார்த்த போது இன்ப அதிர்ச்சி ஒன்று, பாவாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காத்திருந்திது. அதாவது, லாட்டரியில் முகமது பாவா 1 கோடி ரூபாய் பரிசு வென்ற செய்தி தான் அது. வீட்டை வாங்க நபர் ஒருவர் வருவதற்கு சரியாக 2 மணி நேரம் முன்பாக நடந்த அதிசயம், முகமது பாவாவின் கடன் தொல்லைகள் மற்றும் வீட்டையும் காப்பாற்றி உள்ளது.
இது தொடர்பாக பேசும் பாவா, "கடந்த நான்கு மாதங்களாக அதிர்ஷ்டம் எங்களின் துயரை துடைக்கும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். 2 மணி நேரத்திற்கு முன்பாக பரிசு வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. இனி என் வீடு விற்பனைக்கு இல்லை" என்றும் மகிழ்ச்சியுடன் முகமது பாவா தெரிவித்துள்ளார்.
Also Read | தந்தை இறந்த அதே நாளில்... மருத்துவமனையில் பிறந்த மகன்.. கதறித் துடித்த தாய்.. மனதை ரணமாக்கும் துயரம்
மற்ற செய்திகள்