லாட்டரியில் விழுந்த 80 லட்ச ரூபாய்.. நண்பர்களுக்கு பிரம்மாண்ட பார்ட்டி.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் லாட்டரியில் 80 லட்ச ரூபாயை வென்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரியில் விழுந்த 80 லட்ச ரூபாய்.. நண்பர்களுக்கு பிரம்மாண்ட பார்ட்டி.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

Images are subject to © copyright to their respective owners.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவருக்கு 35 வயதாகிறது. லாட்டரி டிக்கெட் வாங்கும் வழக்கம் கொண்டவரான சஜீவ் சமீபத்தில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதற்கு 80 லட்ச ரூபாய் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால் பெருமகிழ்ச்சியடைந்த அவர் இந்த தகவலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

லாட்டரியில் கிடைத்த பணம் சில தினங்களுக்கு முன்னர் அவரது வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. பணம் கிடைத்ததை நண்பர்களுடன் கொண்டாட நினைத்திருக்கிறார் சஜீவ். இதனால் சில தினங்களுக்கு முன்னர் பாங்கோடு பகுதியில் உள்ள சஜீவின் நண்பரான ராஜேந்திரன் என்பவரது வீட்டில் பார்ட்டி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அனைவரும் மது அருந்திய நிலையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இரவு 9 மணியளவில் சஜீவ் மாடியில் இருந்து அருகில் இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சஜீவின் சகோதரருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனை தொடர்ந்து சஜீவின் நண்பர்கள் அவரை திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சஜீவ் கடந்த திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். மது போதையில் இருந்த சஜீவை அவரது நண்பர்களில் ஒருவரான சந்தோஷ் என்பவர் தள்ளிவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சஜீவின் நண்பர்களிடம் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாட்டரியில் 80 லட்ச ரூபாய் வென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

KERALA, LOTTERY

மற்ற செய்திகள்