இறைச்சி வாங்க கடைக்கு போன மனுஷன்.. கோடீஸ்வரராக வீடு திரும்பினார்.. சில மணி நேரங்களில் அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோட்டயம்: கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற மனிதர் பனிரெண்டு கோடி ரூபாய்க்கு அதிபதியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இறைச்சி வாங்க கடைக்கு போன மனுஷன்.. கோடீஸ்வரராக வீடு திரும்பினார்.. சில மணி நேரங்களில் அடித்த ஜாக்பாட்!

அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது கதவை தட்டும் என சொல்ல முடியாது. முந்தின நாள் வரைக்கும் தினசரி வாழ்விற்கும் உணவிற்கும் கஷ்டபட்ட மனிதர்கள் அடுத்த நாளில் பெரிய கோடீஸ்வரர்கள் ஆக மாறுவது உண்டு. ஒரு சில மனிதர்கள் தங்கள் வாழ்வில் வசந்தம் வீசாதா என அதிர்ஷ்டதுக்காக காத்துக் கிடப்பதும் வாடிக்கை. அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பி முயற்சிகளை கைவிட்டு வாழ்க்கையை வீணடிப்பவர்களின் கதைகளும் ஏராளம்.

Kerala man went shop to buy meat and win 12 crores jackpot

கடும் பொருளாதார பின்னடைவு:

அதிலும், பல மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த போராடி வருகின்றனர். அதிலும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மட்ட மனிதர்களிடமும் பொருளாதார வீழ்ச்சி நிலவுகிறது. தினக்கூலி வேலை செய்தவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். வெளியூரில் வேலை இழந்து சொந்த ஊருக்கு செல்லும் அவலமும் நிகழ்ந்துள்ளது. அதிலும் அடித்தட்டு மக்கள் தான் இந்த கொரோனாவினால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Kerala man went shop to buy meat and win 12 crores jackpot

சில மணி நேரங்களில் கோடீஸ்வரர்:

இப்படியாக கஷ்டபட்ட ஒரு கேரள குடும்பத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அய்மனானம் என்ற கிராமம் உள்ளது . இங்கு வாழ்ந்து வரும் பெயின்டிங் தொழிலாளி சதானந்தன். நேற்றைய தினம் காலையில் ஒரு லாட்டரி விற்பவரிடம் இருந்து  கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி உள்ளார். சில மணி நேரங்கள் கழித்து  திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கலின் மூலமாக சதானந்தன் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி பரிசு கிடைத்தது. இந்த தகவலை அறிந்த அவர் இன்ப வெள்ளத்தில் மூழ்கினார்.

Kerala man went shop to buy meat and win 12 crores jackpot

பணத்தை என்ன செய்ய போகிறார்?

சதானந்தன் இதுகுறித்து கூறும்போது, கடந்த 50 வருடங்களாக பெயின்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள சந்தைக்கு சென்றேன். அப்போது சரி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கலாம் என செல்வன் என்னும் லாட்டரி விற்பவரிடம் பரிசு பெற்ற சீட்டை வாங்கினேன்.

அது தற்போது என்னுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது. என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்த சதானந்தன் இந்தத் பரிசுத் தொகையை  குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

லாட்டரி, கேரளா, இறைச்சி, 12 கோடி, KERALA, 12 CRORES, LOTTERY

மற்ற செய்திகள்