கடன் வாங்கும் பிளானில் வங்கிக்கு போன தையல்காரர்.. கொஞ்ச நேரத்துல வாழ்க்கையே புரட்டி போட்ட ஒரே ஒரு போன் கால்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு நபரின் வாழ்க்கை எந்த நிமிசத்தில் எப்படி மாறும் என்பதே யாராலும் எதிர்பார்க்க முடியாது. சிறப்பாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என நாம் நினைக்கும் சமயத்தில் ஏதாவது பிரச்சனை வந்து விடும். மறுபக்கம் வாழ்க்கையில் துன்பங்கள் நிறைய வரும் போது திடீரென எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையே புரட்டி போடும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழும்.

கடன் வாங்கும் பிளானில் வங்கிக்கு போன தையல்காரர்.. கொஞ்ச நேரத்துல வாழ்க்கையே புரட்டி போட்ட ஒரே ஒரு போன் கால்!!

அப்படி தான் தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் வாழ்க்கையும் அவர் எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கையே திசை திருப்பி உள்ளது.

கேரளா மாநிலம், மூர்கட்டுபாடி கிராமத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வருபவர் கனில் குமார். இவர் சிறிய தையல் கடை ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த கடையில் கனிலும், அவரது மனைவியும் வேலை பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. தையல் தொழில் செய்து வந்த சுனில் குமார் மற்றும் அவரது மனைவி வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமலும் இருந்து வந்ததாக தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் லாட்டரி ஒன்றையும் வாங்கி உள்ளார் கனில் குமார். இதனைத் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டிற்கான முடிவுகள் வந்த போது, அதனை பரிசோதித்து பார்த்த கனில் குமார், தனக்கு பரிசுகள் விழவில்லை என்றும் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, தனது தொழிலில் முன்னேற்றம் காண கடன் வாங்குவது குறித்து விசாரிக்கவும் வங்கிக்கும் கனில் குமார் சென்றுள்ளார்.

Kerala man went bank for loan win 80 lakh in lottery

அப்போது அவரை அழைத்த நண்பர் ஒருவர், கனிலுக்கு லாட்டரியில் முதல் பரிசாக 80 லட்சம் ரூபாய் பரிசு விழுந்ததையும் அவர் கனிலிடம் தெரிவித்துள்ளார். முதலில் தனக்கு பரிசு எதுவும் விழவில்லை என கருதிய கனில் குமார், முதல் பரிசாக 80 லட்ச ரூபாய் ஜெயித்ததை அறிந்ததும் திக்கு முக்காடி போனார். மேலும் லாட்டரியில் ஜெயித்த பணம் கொண்டு தனது தொழிலில் முன்னேற்றம் காண கனில் குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கமுள்ள கனில் குமார், இதற்கு முன்பு 50,000, 500 மற்றும் 100 ரூபாயை லாட்டரியில் பரிசாக வென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

KERALA, LOTTERY

மற்ற செய்திகள்