‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்காக’ ... முன்னாள் காவலர் செய்த நெகிழ்ச்சி காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டைப் போலவே கேரளாவில் பரவலாகக் காணப்படுகிற சூழலில், அங்கும் தேவையான நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்காக’ ... முன்னாள் காவலர் செய்த நெகிழ்ச்சி காரியம்!

குறிப்பாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் தரும் ஒத்துழைப்புகளும், ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவிகளும்தான் இந்த நேரத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் அண்மையில் தனது மனைவியை புற்றுநோய் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வரை சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற முதியவரின் செயல் நெகிழவைத்தது.

இதேபோல் முன்னாள் போலீஸ் அதிகாரியும், திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியின் சர்ஜெண்டுமானவர் விஷ்ணு. இவர் ஆலப்புழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்காக 150 கி.மீ சென்று மருந்துகளை வாங்கிவந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.