'திரைப்பட' பாணியில் 'பெண்ணை' கொன்று 'இளைஞர்' செய்த காரியம்!.. 'நடுங்க' வைக்கும் 'சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாபநாசம் பட பாணியில் பெண்ணை கொலை செய்து வீட்டிலேயே புதைத்தவரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் நடுங்க வைத்துள்ளது.

'திரைப்பட' பாணியில் 'பெண்ணை' கொன்று 'இளைஞர்' செய்த காரியம்!.. 'நடுங்க' வைக்கும் 'சம்பவம்'!

கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள ஊர் திருக்கோவில்வட்டம். இது கொல்லம் பகுதியை சேர்ந்த ஊராகும். இந்த ஊரில் வசித்து வந்த 42 வயதான சுசித்ரா என்கிற அழகுக்கலை நிபுணர் கடந்த மார்ச் 18ம் தேதி அன்று கொச்சியில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு தனது வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ஆனால் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும்  கோட்டயம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரித்ததில் சுசித்ரா தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் 5 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதாக அவர் வேலைபார்க்கும் அழகுநிலைய முதலாளியிடம் தகவல் தெரிவித்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சுசித்ராவின் தொலைபேசி அழைப்புகளை பரிசோதனை செய்தபோது அவர் பாலக்காட்டில் உள்ள பிரசாந்த் என்கிற இசை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு பேசியதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். பின்னர் கொல்லத்தை சேர்ந்த குற்றப் பிரிவு அதிகாரிகள் குழு விசாரணைக்காக பாலக்காடு விரைந்து பிரசாந்திடம் இதுபற்றி விசாரணை நடத்தியது. அப்போதுதான் பிரசாந்த் இந்த கொலையை செய்தது  தான் தான் என ஒப்புக்கொண்டார்.

ஆகவே அவரைக் கைது செய்த பின்பு போலீசார், சுசித்ராவின் உடலை கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுத்துள்ளனர். விசாரணையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரசாந்த் தனது குடும்பத்தினரை வெளியே அனுப்பிவிட்டு சுசித்ராவுடன் தனது இல்லத்தில் உல்லாசமாக இருந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், இந்த சண்டையில் பிரசாந்த் சுசித்ராவை ஒரு டேபிள் விளக்கின் ஒயரைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொலையை மூடி மறைப்பதற்காக பிரசாந்த் இறந்துபோன சுசித்ராவின் இரு கால்களையும் துண்டித்து எரிக்க முயன்றதாகவும், அதன் பின்னர் உடலை பாலக்காடு இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள இவரது வாடகை வீட்டின் பின்புறம் பின்பக்கம் அடக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவரங்கள் யாவும் காவல்துறைக்கு வாக்குமூலமாக பிரசாந்த் அளித்துள்ளார். அதனை வைத்துதான் சுசித்ராவின் உடலை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.