லாட்டரி அடித்து கோடீஸ்வரர் ஆக.. புதுவிதமாக திட்டம் போட்ட நபர்.. பரிசு வென்றும் கடைசியில் காத்திருந்த ஆப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: கேரளாவில் லாட்டரி சீட்டில் பரிசு வென்ற நபர் அந்த சீட்டை வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை விதித்த நிலையில் கேரளாவில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. சமீப நாட்களாகவே காலையில் சாதாரண மனிதனாக கண் விழிப்பவர்கள் மாலையில் பெரும் கோடீஸ்வரர்களாக மாறி விடுகின்றனர். கொரோனா மாதிரியான கொடூர தொற்று காலங்களில் இம்மாதிரியான திடீர் மாற்றங்கள் அவர்களை எல்லையில்லா மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்கின்றன.
சாதாரண கூலி வேலை செய்துக் கொண்டிருப்பவர்களுக்கும் லாட்டரி சீட்டின் மூலம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஆனால் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இருந்து சின்னாபின்னமாகி போனவர்கள் கோடி பேர். இப்படியாக அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கி இருக்கும் மக்கள் மத்தியில், லாட்டரியின் மூலம் கிடைக்கும் அதிர்ஷ்டத்தை கேரளாவை சேர்ந்த ஒருவர் திருட்டு தனமாக பெற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் நினைத்தது போலவே நடந்தது தான் ஆச்சரியம்.
வெடித்த எரிமலை.. வெளியுலக தொடர்பில்லாமல் தவிக்கும் டோங்கோ தீவு.. உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்
லாட்டரி சீட்டுகள் திருட்டு:
கேரளாவில் கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்னும் நபர் அங்குள்ள ஜேஜே லொட்டரி ஏஜென்சியில் இருந்து இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து அனைத்து லாட்டரி எண்களும் மாநிலம் முழுவதும் உள்ள ஏஜென்சி மூலமாக அனைத்து இடத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
திருடனை பிடிக்க திட்டம்:
இதன்மூலமாக திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பாபு திருடிய லாட்டரியில் ஒரு சீட்டுக்கு பரிசுத்தொகை விழுந்தது. இதனை கேள்விப்பட்ட பாபு அதை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயன்றுள்ளார்.
அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடி உள்ளார். இதன்பிறகு தலைமறைவாக இருந்த பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஏற்கனவே பாபு மீது 30 வழக்குகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்