‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா கண்காணிப்பில் இருந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் மருத்துவமனையில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அசந்த நேரத்தில் அங்கிருந்து தப்பித்த அந்த நபர் பின்னர் சாலை விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் சிலர் ஆப்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவர் தான் கொரோனா கண்காணிப்பில் இருந்ததை சொல்லாமல் இருந்துள்ளார்.
அதன்பிறகு மருத்துவமனைக்கு வந்த அந்த நபரின் உறவினர்கள் சிலர் சொல்லியே அவர் கொரோனா கண்காணிப்பில் இருந்தது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கிய அந்த நபரைக் காப்பாற்றியவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவர்கள், போலீசார் என 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த 40 பேரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.