52 வருசத்துல.. லாட்டரிக்கு செலவு செஞ்சது மட்டும் 3.5 கோடி ரூபா.. "ஆனா கெடச்ச பரிசு எவ்ளோ தெரியுமா?"
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஓண பண்டிகையை முன்னிட்டு, சமீபத்தில் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
Also Read | 30 வருஷ காத்திருப்பு.. சர்ப்ரைஸ் கொடுத்த வெப் தொலைநோக்கி.. சந்தோஷத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!
இதற்கான முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அனூப், 25 கோடி ரூபாய் பரிசினை வென்றிருந்தார்.
முன்னதாக, குடும்ப சூழ்நிலை காரணமாக மலேசியாவுக்கு சமையல்காரராகவும் செல்ல அனூப் திட்டம் போட்டிருந்தார். அப்படி ஒரு வேளையில் தான், அனூப்பிற்கு லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. பலரும் அனூப்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த நிலையில், ஒரே நாளில் தனது வாழ்க்கையே மாறி போனதால் உச்சகட்ட உற்சாகத்தில் இருந்தார் அனூப்.
சிலரது வாழ்க்கை, அனுபை போல திடீரென தலை கீழாக திருப்பிப் போடும் அளவுக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிக்கலாம். ஆனால், அதே வேளையில் பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கியும் சிலருக்கு அதிர்ஷ்டம் கைகூடாமல் போகும். அப்படிப்பட்ட ஒருவர் குறித்த செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம், கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவருக்கு தற்போது 70 வயதாகிறது. கூலி தொழிலாளியான இவர், கடந்த 52 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருவதை பழக்கமாக கொண்டுள்ள ராகவன், தான் இதுவரை வாங்கிய அனைத்து லாட்டரி டிக்கெட்டுகளையும் தனது வீட்டில் சேர்த்து வைத்துள்ளார். அப்படி இருக்கையில், சமீபத்தில் தான் எத்தனை ரூபாய்க்கு இதுவரை லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி உள்ளோம் என்பதை அறிவதற்காக அதற்கான தொகையை அறிய கணக்கு போட்டு பார்த்துள்ளார்.
அப்போது, கடந்த 52 ஆண்டுகளில் சுமார் 3.5 கோடி ரூபாயை லாட்டரிக்கு மட்டுமே அவர் செலவு செய்துள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இத்தனை ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரே முறை அதிகபட்சமாக 5,000 ரூபாய் மட்டும் தான் ராகவன் வென்றுள்ளார். இது போக, அவ்வப்போது 100, 200 என குறைந்த ரூபாயையும் அவர் வென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இருந்த போதிலும் நிச்சயம் தனக்கு ஒரு நாள் ஜாக்பாட் அடிக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் ராகவன். அவரை சுற்றியுள்ள நபர்கள் லாட்டரி வாங்குவதை கைவிடுங்கள் என கூறினாலும் தினசரி கூலி தொழிலாளியான ராகவன், லாட்டரி வாங்க பணத்தை தொடர்ந்து செலவழிப்பேன் என கூறுகிறார். அவரது குடும்பத்தினருக்கும் இந்த பழக்கம் பிடிக்கவில்லை என்ற போதிலும், ஒரு நாள் நல்லது நடக்கும் என கருதுகின்றனர்.
ஒருவேளை, என்றாவது ஒரு நாள் நிச்சயம் தனது கணவருக்கு ஜாக்பாட் அடிக்கும் என ராகவனின் மனைவியும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
மற்ற செய்திகள்