கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விமானம் போலவே கனவு வீட்டை கட்டிய நபர்.. வைரலாகும் வீடியோ.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஒருவர் தனது கனவு வீட்டை கட்டி வருகிறார். பார்ப்பதற்கு விமானம் போலவே இருக்கும் இந்த வீடு சுற்றுலாவாசிகளை பெருமளவில் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டிய கணவன்.. ராஜஸ்தானில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
ஆசை
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோஸ் தேவசியா என்ற விமல். இவருக்கு சிறுவயது முதலே விமானம் போல வீடுகட்ட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. தனது ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைக்க துவங்கியுள்ளார் விமல். தனக்கு 1 ரூபாய் ஊதியமாக கிடைத்துவந்த நிலையில் காற்றுப்பாறை பகுதியில் 500 ரூபாய் விலை கொடுத்து ஒரு இடத்தை வாங்கியுள்ளார் இவர். அங்கே தனது கனவு விமான வீட்டையும் கட்ட துவங்கியிருக்கிறார்.
கட்டுமான பணிகள்
கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் தனது விமான வீட்டின் கட்டுமான பணிகளில் இறங்கியுள்ளார் விமல். வாகனங்கள் செல்லவே போதிய பாதை இல்லாத இந்த மலை உச்சியில் தனது வீட்டை கட்டிவருகிறார் இவர். இன்னும் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் இப்போதே இந்த வீட்டை காண சுற்றுலா வாசிகள் இந்தப் பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இன்னும் இரண்டு வருடங்களில் இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடையும் என தெரிவித்திருக்கிறார் விமல்.
எதிர்பார்ப்பு
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்த விமான வீட்டின் உரிமையாளர் விமல், "இதன் கட்டுமான பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் ஆகலாம். தினந்தோறும் இந்த வீட்டை காண பல இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கே வருகின்றனர். வீட்டின் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் இன்னும் அதிக சுற்றுலாவாசிகள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.
மலை உச்சியில் விமானம் இருப்பது போல காட்சியளிக்கும் வகையில் இந்த வீடு தத்ரூபமாக கட்டப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடு தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
Also Read | "பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது".. DGP சைலேந்திர பாபு விளக்கம்..!
மற்ற செய்திகள்