"என்ன அவ கூட சேர்த்து வைங்க.." பிரித்த குடும்பம்.. நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்.. கடைசியில் நீதிபதி போட்ட உத்தரவு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே அமைந்துள்ள ஆலுவா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின் (வயது 22).

"என்ன அவ கூட சேர்த்து வைங்க.." பிரித்த குடும்பம்.. நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்.. கடைசியில் நீதிபதி போட்ட உத்தரவு

Also Read | "பாவம்யா.. கல்யாணம் முடிஞ்சா... 3 நாளைக்கு இத பண்ணக் கூடாதா??.." வியப்பில் ஆழ்த்தும் வினோத பழக்கம்.. Trending

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், படிப்பதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், தாமரைசேரி என்னும் பகுதியைச் சேர்ந்த பாத்திமா நூரா (வயது 23) என்ற இளம்பெண்ணும் அங்கு படிக்க வந்துள்ளார்.

அந்த சமயத்தில், ஆதிலா மற்றும் பாத்திமா ஆகியோர் நெருங்கிய தோழிகளாக மாறி உள்ளனர். இதன் பின்னர், நாட்கள் செல்ல செல்ல இந்த பழக்கம் காதலாகவும் இருவருக்கும் இடையே உருவாகி உள்ளது.

 Kerala lesbian couple separated by family reunited by court

கிளம்பிய எதிர்ப்பு

இதனைத் தொடர்ந்து, இருவரும் கேரளா திரும்பிய பின்னர், ஒன்றாக இணைந்து கொச்சியில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆதிலா மற்றும் பாத்திமா ஆகியோரின் பழக்கம் தொடர்பாக அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிய வர, இரு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது மட்டுமில்லாமல், இருவரையும் பெற்றோர்கள் பிரித்து, வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

 Kerala lesbian couple separated by family reunited by court

ஆதிலா எடுத்த முடிவு

இதனைத் தொடர்ந்து, பாத்திமாவுடனான உறவு குறித்து, சமூக ஊடகத்தில் தன்னுடைய கருத்தினை பதிவிட்டார் ஆதிலா. சவுதி அரேபியாவில் தாங்கள் சந்தித்து கொண்டது குறித்தும், தங்களின் காதலுக்கு அவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பற்றியும், தன்னுடைய பதிவில் ஆதிலா விளக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல், பாத்திமாவை பிரிய முடியாமல் தவித்த ஆதிலா, கேரள உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். பாத்திமாவுடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு

தொடர்ந்து, ஆதிலாவின்  மனுவை விசாரித்த நீதிபதிகள், பாத்திமாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோழிக்கோடு காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதன் பின்னர், ஆஜர்படுத்தப்பட்ட பாத்திமா மற்றும் ஆதிலாவிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தாங்கள் இணைந்து வாழ விரும்புவதாக இருவரும் தெரிவித்தனர்.

 Kerala lesbian couple separated by family reunited by court

இதனையடுத்து, பாத்திமா மற்றும் ஆதிலா ஆகியோர் சேர்ந்து வாழ நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் சி. ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அனுமதி வழங்கியது. இந்த முடிவிற்கு பாத்திமா மற்றும் ஆதிலா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ள நிலையில்,சமூக வலைத்தளம் வாயிலாக தங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றிகளை குறிப்பிட்டுள்ளனர்.

Also Read | கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தோடு அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு… என்ன விசேஷம்.? – Viral pics

KERALA, LESBIAN COUPLE, FAMILY, COURT

மற்ற செய்திகள்