"நல்ல மழை, ரோடு ஃபுல்லா தண்ணி.." பேருந்து டிரைவர் செய்த காரியம்.. செவிலியர் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சி வீடியோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக, சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும், மிதமான வேகத்துடன் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, மிகவும் கட்டுப்பாடுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

"நல்ல மழை, ரோடு ஃபுல்லா தண்ணி.." பேருந்து டிரைவர் செய்த காரியம்.. செவிலியர் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சி வீடியோ..

Also Read | ஏர்போர்ட் பாத்ரூமில் நாய்க்குட்டி.. கூடவே இருந்த லெட்டர்.. படிச்சு பாத்துட்டு கண்கலங்கிய அதிகாரிகள்..!

அப்படி விதிகளை மீறி, அதிவேகமாக சென்று விபத்துக்குள் சிக்கும் வாகனங்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், நிறைய இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணுவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், கேரள மாநிலத்தில் நடந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி, ஏரளாமானோரை அதிர்ந்து போகச் செய்துள்ளது.

எதிர்பாராத சம்பவம்

கேரள மாநிலம், கண்ணூர் பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று, தலச்சேரி வழியாக பையனூர் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, குற்றிக்கோல் என்னும் பகுதியை நெருங்கிய சமயத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அரங்கேறி உள்ளது.

மழைக்காலம் என்பதால் சாலை முழுவதும் மழை நீர்கள் நிரம்பி சென்று கொண்டிருந்த நிலையில், முன்பு சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை, ஓவர்டேக் செய்ய எண்ணிய தனியார் பேருந்து ஓட்டுநர், வாகனத்தை வேகமாக செலுத்த, திடீரென மழைநீரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நடுரோட்டில் நிலைத் தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இது தொடர்பான காட்சிகள், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த விபத்திற்கு காரணம், பேருந்தை வேகமாக ஒட்டியது தான் என சில பயணிகள் குறிப்பிடத்தாக கூறப்படுகிறது.

kerala kannur private bus overturns at kuttikol amid rain

செவிலியருக்கு நேர்ந்த துயரம்..

பேருந்தின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜோபி என்ற செவிலியர், இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, பேருந்தில் பயணம் செய்த மற்ற சில பயணிகளும் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்ததும், அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஆகியோர், பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

பல பயணிகளை பேருந்தில் வைத்து பத்திரமாக கொண்டு செல்லும் பொறுப்பு என்பது ஒரு பேருந்தின் ஓட்டுநர் கையில் உள்ளது. ஆனால், மற்ற வாகனங்களை முந்திச் செல்ல வேண்டும் என்ற நினைப்பில், மிக அதிவேகமாக வண்டியை ஓட்டி இது போன்ற விபத்தினை உருவாக்கியது குறித்தும், நெட்டிசன்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "என் அப்பா பக்கத்துல இருக்க மாதிரி தோணுது".. இறந்துபோன தந்தையின் சட்டைகளை கொண்டு மகள் போட்ட திட்டம்.. நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ..!

KERALA, PRIVATE BUS, KERALA KANNUR PRIVATE BUS OVERTURNS, KUTTIKOL

மற்ற செய்திகள்