'விஷ பாம்பை விட்டு மனைவியை கொன்ற வழக்கில் அதிரடி திருப்பம்...' இந்த கொலை எதற்காக நடந்துள்ளது தெரியுமா...? - அதிர வைக்கும் பல தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் மாற்றுத்திறனாளி மனைவியை பாம்பை கடிக்க விட்டு கணவரே கொலை செய்த வழக்கில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

'விஷ பாம்பை விட்டு மனைவியை கொன்ற வழக்கில் அதிரடி திருப்பம்...' இந்த கொலை எதற்காக நடந்துள்ளது தெரியுமா...? - அதிர வைக்கும் பல தகவல்கள்...!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா (25). வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணான இவருக்கும், தனியார் வங்கியில் பணி புரியும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. பின்னர் உடல் முழுவதும் நீல வண்ணமாக மாறி  நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், உத்ராவின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். ஏனெனில், அதற்கு முன்பே இதே போன்று ஒரு முறை உத்ராவை பாம்பு கடித்துள்ளது. அதிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்த அவரை மீண்டும் தொடர்ச்சியாக எப்படி பாம்பு கடிக்கும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், ஏ.சி. இருக்கும் அறையில் உத்ரா படுத்திருந்ததால், ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அப்படியெனில் பாம்பு எப்படி கடிக்கும் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். திருமணத்தின் போது 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் என வரதட்சனை கொடுக்கப்பட்ட போதும், கூடுதலாக வரதட்சனை கேட்டு உத்ராவை சூரஜ் கொடுமைப்படுத்தியதால் அவரே திட்டமிட்டு உத்ராவை கொலையை செய்திருக்கலாம் எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து, உத்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சூரஜ் மற்றும் அவரது நண்பருமான சுரேஷ் (பாம்பு பிடிப்பவர்) ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஷ பாம்பை ரூ.10,000 கொடுத்து சுரேஷிடம் வாங்கி

உத்ராவை, சூரஜ் கடிக்க விட்டதாக தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும், சூரஜ் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மனைவி உத்ராவை தானே கொன்றதாக சூரஜ் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்வதற்கு சில தினங்கள் முன்பு தனது மனைவியின் பெயரில் சூரஜ் இன்சூரன்ஸ் செய்துள்ளார். இந்த இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே உத்ராவை கொன்றுள்ளதாக தெரிவித்தார். போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்