கேரளாவில் இரண்டு பெண்கள் பலியான விவகாரம்!!.. சிசிடிவி மூலம் தெரிய வந்த அதிர்ச்சி!!.. "நேரா வீட்டுக்குள்ள தான் போறாங்க"!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த ரோஸ்லின் மற்றும் தருமபுரியை சேர்ந்த பத்மா ஆகியோர், எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனிடையே, சில மாதங்கள் இடைவெளியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர்.
இது பற்றி இருவரின் வீட்டாரும் புகார் கொடுத்திருந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரளாவையே நடுங்க வைக்கும் பின்னணி தெரிய வந்தது. ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரின் செல்போன் எண்கள் கொண்டு விசாரித்ததில் கடைசியாக இருவருக்கும் முகம்மது ஷபி என்ற ஒரே நபர் பேசி இருப்பதும் தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் பண சிக்கல் தீர சிறப்பு பூஜை செய்ததும் அதில் இரு பெண்களையும் பலி கொடுத்ததும் காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களிலும் சில பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெண்களின் உடல் உறுப்புகளை சாப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைதான லைலா, நரமாமிசத்தை சாப்பிட்டதாக காவத்துறையினரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக முகமது ஷபி, பெண்களின் உறுப்புகளை தம்பதியை சாப்பிட சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கிற்கு துப்பு கொடுத்ததாக செய்தி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பத்மா காணாமல் போன அதே தினம், அவர் இருந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்த போது, அவர் பத்தனம்திட்டாவில் உள்ள பகவல்சிங் வீட்டிற்கு சென்றது தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர், அவர் சென்றது தொடர்பான சிசிடிவியை ஆய்வு செய்து பகவல் சிங் வீடு வரை அடைந்த போலீசார், அவரது வீட்டிற்கு அருகேயுள்ள வீட்டின் சிசிடிவியையும் ஆய்வு செய்த போது, பகவல் சிங் வீட்டிற்கு பத்மா சென்றது தெரிய வந்தது. இதை வைத்து தான் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், பத்மாவை தேடி போன போது அதே வீட்டில் ரோஸ்லின் சென்று இறந்து போனதும் தெரிய வந்துள்ளது.
மற்ற செய்திகள்