கேரளா - இரண்டாவது பெண் பலியான பின்.. குற்றவாளி போட்ட பதிவு?.. திடுக்கிட வைத்த பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவையே உலுக்கிய 2 பெண்கள் பலியான சம்பவத்தில் கைதான நபர்களில் ஒருவர், இரண்டாவது பெண்ணை பலி கொடுத்த பின் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த ரோஸ்லின் மற்றும் தருமபுரியை சேர்ந்த பத்மா ஆகியோர், எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளனர். இதனிடையே, சில மாதங்கள் இடைவெளியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர். இது பற்றி இருவரின் வீட்டாரும் புகார் கொடுத்திருந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரின் செல்போன் எண்கள் குறித்து விசாரித்ததில் கடைசியாக இருவருக்கும் முகம்மது ஷபி என்ற ஒரே நபர் பேசி இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து முகமது ஷபியை காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் பண சிக்கல் தீர சிறப்பு பூஜை செய்ததும் அதில் இரு பெண்களையும் பலி கொடுத்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களிலும் சில பகுதிகளில் காயங்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில், பகவல் சிங் குறித்து தற்போது வலம் வரும் தகவல் ஒன்று, இணையத்தில் பகீர் கிளப்பி உள்ளது. இரண்டு பெண்கள் பலியானது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருக்கையில், பகவல் சிங் பின்புலம் பற்றியும் விசாரித்துள்ளனர்.
பேஸ்புக் தளத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பகவல் சிங், நிறைய ஹைக்கூ மற்றும் போஸ்ட்கள் பகிர்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பேஸ்புக் பயோவிலும் ஏராளமான விஷயங்களை அவர் பதிவு செய்து வைத்துள்ளார். பத்மாவின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காணாமல் போன அன்று பகவல் சிங் வீட்டிற்கும் சென்றிருந்தது தெரிய வந்தது.
அப்படி அவர் போன அடுத்த சில நாட்களில் பகவல் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ஹைக்கூவை குறிப்பிட்டுள்ள பகவல் சிங், "ஒரு அடுப்பு உலை, வேலை செய்யும் கொல்லனின் மனைவி, அவள் உடல் வளைந்திருந்தது" என மலையாளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பத்மா காணாமல் போன பிறகு, இந்த பதிவை பகவல் சிங் பகிர்ந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவர் பலி ஆனதற்கும் இதற்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வேறு ஏதாவதை குறிப்பிட்டு இதனை பதிவு செய்தாரா என்றும் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்