“நான் பெரிய ரவுடின்னு எல்லாத்துக்கும் காட்டணும்”.. திட்டமிட்டு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. கைதான நபர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் தனியார் விடுதி வரவேற்பாளர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

“நான் பெரிய ரவுடின்னு எல்லாத்துக்கும் காட்டணும்”.. திட்டமிட்டு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. கைதான நபர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

"என் புள்ள எப்போ ஊருக்கு வருவான்னு தெரியலயே.." அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த சோகம்.. வீடியோ காலில் கதறி அழுத மகன்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த தம்பனூரில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் பணியாற்றி வந்தார். அவரை இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். விடுதிக்குள் புகுந்து சரமாரியாக ஐயப்பனை வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை தேடிவந்தனர். இதனிடையே நடைபெற்ற விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐயப்பனை கொலை செய்த அந்த நபர் மனைவியுடன் இந்த விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் அஜீஷ் என்பது தெரியவந்துள்ளது. விடுதியில் தங்கியிருந்த போது அஜீஷுக்கும், ஐயப்பனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஐயப்பனை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Kerala hotel receptionist murder case accused shocking confession

இதனைத் தொடர்ந்து போலீசாரிடம் அஜீஷ் அளித்த வாக்குமூலத்தில், தான் கேரளாவில் ஒரு பெரிய ரவுடி என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த கொலையை அரங்கேற்றிய பகீர் தகவல் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த கொலையை போதையில் செய்யவில்லை என்றும், முறையாக திட்டமிட்டு பலர் பார்த்து அஞ்ச வேண்டும் என்பதற்காகவே பட்டப்பகலில் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"உயிரே போனாலும் நான் இப்போ ஊருக்கு வரமாட்டேன்.." பிடிவாதத்துடன் இந்திய மாணவி.. நெகிழ்ச்சி பின்னணி

KERALA, HOTEL RECEPTIONIST MURDER CASE, SHOCKING CONFESSION, MAN, ARREST, POLICE, கேரள மாநிலம், கொலை, வாக்குமூலம்

மற்ற செய்திகள்