ஷாப்பிங் மால் அடிக்கடி போவீங்களா.. உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்கள் அந்த கட்டடத்தின் அடிப்பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்காக வணிக வளாகம் சார்பில், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும் கட்டணமாக வசூலித்து வருகின்றன.

ஷாப்பிங் மால் அடிக்கடி போவீங்களா.. உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அதிலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தால், கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கின்றன. இது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

kerala high court announce malls dont have collect parking fees

இந்நிலையில்,  மலையாள திரைப்பட இயக்குனர் பாலி வடக்கன், கடந்த டிச.2ம் தேதி தனியார் மாலுக்கு சென்றிருந்தார். அங்கு அவரது வாகனத்தை நிறுத்துவதற்கு ரூ.20 பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  தொடக்கத்தில் பார்க்கிங் கட்டணம் செலுத்த இயக்குனர் பாலி மறுக்கவே, மால் ஊழியர் வெளியேறும் கதவுகளை மூடி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து கட்டணத்தை செலுத்தி அவர் வெளியேறியுள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் பாலி வடக்கன் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக, 'வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பார்க்கிங் வழங்குவது என்பது வணிக வளாகத்தின் பொறுப்பே. அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது இயக்குநர் பாலி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால்,  இயக்குனர் பாலி வடக்கனின் வாதத்தை முற்றிலும் நிராகரித்த தனியார் மால் தரப்பு வழக்கறிஞர், தங்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

kerala high court announce malls dont have collect parking fees

இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நீதிபதி நாகரேஷ் தலைமையிலான அமர்வு கேரள மாநில அரசு, கலமசேரி முனிசிப்பாலிடி, தனியார் மால் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதன் பொருட்டு ஆஜரான வழக்கறிஞர் ஶ்ரீகுமார் கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்தின் 447 பிரிவின் கீழ் தனியார் மால் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பின்னர் 14 ஜனவரி 2022 அன்று மீண்டும் இது விசாரணைக்கு வந்தது. கட்டட விதிகளின்படி, கட்டடம் கட்டுவதற்கு, வாகனம் நிறுத்த போதிய இடம் அவசியம். கட்டடத்தின் ஒரு பகுதி வாகனம் நிறுத்தும் இடம். பார்க்கிங் இடம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கட்டடம் கட்டப்படுகிறது. கட்டடம் கட்டிய பிறகு, கட்டடத்தின் உரிமையாளர் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க முடியுமா என்பது கேள்வி. முதல் பார்வையில் அது சாத்தியமில்லை என்று கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நகராட்சிக்கு உத்தரவிட்ட கேரள மாநில நீதிமன்றம், வழக்கை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

KERALA, KERALA, SHOPPING MALL, PARKING PAYMENT, PAULY VADAKKAN, KERALA HIGH COURT, கேரளா, ஷாப்பிங் மால் பார்க்கிங் கட்டணம்

மற்ற செய்திகள்