'அவங்க இத கத்துக்கணும்ன்னு தான் இப்படி செஞ்சேன்'... 'பெற்ற குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் ஓவியம்'... விளாசிய உயர்நீதிமன்றம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெற்ற குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட வழக்கில், ரெஹானா பாத்திமாவை உயர்நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

'அவங்க இத கத்துக்கணும்ன்னு தான் இப்படி செஞ்சேன்'... 'பெற்ற குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் ஓவியம்'... விளாசிய உயர்நீதிமன்றம்!

கேரளாவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா கடந்த மாதம் தனது மைனர் குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, ‘உடல் மற்றும் அரசியல்’ என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். சமூகவலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ கடும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஏற்கெனவே சபரிமலை விவகாரத்தில் கடும் சர்ச்சையில் சிக்கிய அவரின் இந்த வீடியோ கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. பத்தனம் திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் திருவல்லா போலீஸில், ரெஹானா பாத்திமாவின் சர்ச்சைக்குரிய வீடியோவைக் காண்பித்து அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து,ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தான் செய்த செயலை நியாயப்படுத்தியும், தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவே தனது உடலில் படம் வரையவைத்து உணர்த்தினேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வி.உன்னிகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமர்வில் ரெஹானா பாத்திமா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “மனுதாரர் தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கத்தான் இவ்வாறு செய்தார்” எனத் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி உன்னிகிருஷ்ணன் கடும் கோபமடைந்தார். மேலும் கடுமையாகப் பேசிய அவர், ''ரெஹானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரின் கொள்கையின்படி, அவரின் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முழு உரிமை இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் 4 சுவர்களுக்குள் அவரின் வீட்டுக்குள் இருந்திருக்க வேண்டும்.

Kerala HC rejected the anticipatory bail plea of Rehana Fathima

மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். மேலும் மனுதாரர் தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் எனும் வாதங்களையும், விளக்கத்தையும் நிச்சயமாக ஏற்க முடியாது'' எனக் கூறி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மற்ற செய்திகள்