சபரிமலையில் விஐபி தரிசன விவகாரம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த அதிரடி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஐபி தரிசனம் குறித்த விவகாரத்தில் அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

சபரிமலையில் விஐபி தரிசன விவகாரம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த அதிரடி உத்தரவு..!

Also Read | "எழுதி வச்சுக்கங்க.. அடுத்த 10 வருஷத்துல இந்த பையன் பெரிய ஆளா வருவான்".. இளம்வீரர் மீது நம்பிக்கை தெரிவித்த யுவராஜ் சிங்..!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை  கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அது முதலே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்க இருப்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில் நிலக்கல்லில் ஹெலிகாப்டரில் இறங்கிய பின்னர் காரில் பம்பைக்கும், பின்னர் அங்கிருந்து டோலியில் சன்னிதானத்திற்கும் சென்று விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இதற்கு கட்டணமாக 48 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

Kerala HC orders No helicopter service or VIP Dharshan to sabarimalai

இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சபரிமலையில் அனைவரும் சாதாரண பக்தர்கள் மட்டுமே. யாருக்கும் எவ்வித முன்னுரிமையும் கிடையாது. மத்திய மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் சேவை எப்படி வழங்க முடியும்? திருவிதாங்கூர் தேவசம் போர்டு இதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

Kerala HC orders No helicopter service or VIP Dharshan to sabarimalai

மேலும், சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை அளிப்பதாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை உடனடியாக இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read | ₹5 கோடிக்கு சொந்த வீடு இருக்கு.. டெய்லி ₹20 ஆயிரம் வருமானம் வேற.. ஆனாலும் ரோடு தான் வீடு.. பகீர் கிளப்பிய காரணம்..!

KERALA, KERALA HC, KERALA HC ORDERS, HELICOPTER SERVICE, VIP DHARSHAN, SABARIMALAI, சபரிமலை, விஐபி தரிசனம்

மற்ற செய்திகள்