'நான் வாழ்ந்தா உன்கூட தான்...' 'கல்யாணம் ஆன அடுத்த நாளே...' 'தோழியுடன் எஸ்கேப் ஆன மனைவி...' - விஷயத்தை கேட்டு கணவனுக்கு மயக்கமே வந்திடுச்சு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில், மறுநாள் புதுமணத்தம்பதியினர் இருவரும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்றனர். அப்போது இளம்பெண் போன் செய்துவிட்டு வருவதாக கூறி, கணவரின் செல்போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
வெளியே போனவர் நீண்ட நேரமாகியும் வங்கிக்குள் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவன் வெளியே வந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த கணவன் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் புதுமணப்பெண் மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது, புதுப்பெண்ணிற்கு ஒரு தோழி இருப்பதும், 2 பேரும் உயிருக்கு உயிராக அன்பு செலுத்தி வந்ததும் தெரிய வந்தது. சம்பவம் நடந்த அன்று அந்த இருவரும் ஒரு பைக்கில் ஏறி தப்பி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவர் அங்கிருந்து கிளம்பும் போது வங்கியில் இருந்து எடுத்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகையையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். திருமணமான மறுநாள் மனைவி தோழியுடன் சென்றதை அறிந்து அதிர்ச்சியில் மயங்கி சரிந்துள்ளார்.
உடனடியாக அவரை திருச்சூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தப்பித்து சென்ற புதுப்பெண், அவரது தோழி இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், புதுப்பெண்ணின் தோழியின் தந்தைக்கு மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய லாட்ஜ் நிர்வாகத்தினர், உங்கள் மகள் அடையாள அட்டையை காண்பித்து ஒரு அறை எடுத்து இருந்தார். அவருடன் மற்றொரு இளம் பெண்ணும் தங்கி இருந்தனர். இருவரும் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார்கள். ஆனால், திரும்பி வரவே இல்லை. அதோடு, அறைக்கான வாடகை கட்டணமும் செலுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தோழியின் தந்தை காவல்துறையினருடன் மதுரைக்கு சென்று இருவரும் எப்படியும் வந்து விடுவார்கள் என அந்த லாட்ஜில் காத்திருந்தார். அவர்கள் எதிர்பார்த்தது போலவே புதுப்பெண்ணும், தோழியும் மீண்டும் அந்த லாட்ஜ்க்கு வந்தனர். புதுப்பெண் மற்றும் தோழி தனது தந்தையும், அவருடன் இருந்த காவல் அதிகாரிகளையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து இருவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், தோழிகள் 2 பேரும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இரண்டு பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் கையில் பணம் இல்லை. எனவே பணத்திற்காக திருமணம் வரை காத்திருந்துள்ளனர்.
திருமணம் முடிந்ததும் மறுநாள் கணவருடன் வங்கிக்கு சென்று 16 பவுன் நகை மற்றும் வங்கியில் எடுத்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்து தப்பித்த திட்டத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து புதுப்பெண்ணையும், அவரது தோழியையும் அழைத்து போலீசார் அறிவுரைகள் கூறியுள்ளனர். பிறகு, இருவரின் உறவினர்களையும் அழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
புதுப்பெண்ணுடன் சென்ற தோழியும் திருமணம் செய்தவர் தான். ஆனால் 15 நாளில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்துள்ளார்.
மற்ற செய்திகள்