மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல வாந்தி.. "அம்மாடியோவ், இத்தனை கோடி ரூபா மதிப்பா இதுக்கு??.."
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாகவே, கடல் என்றால் நிறைய அழகான பொருட்கள் எப்போதும் நிறைந்திருக்கும். கடற்கரைக்கு சென்றாலே ஒரு புதுவிதமான மன நிம்மதி கூட பலருக்கும் கிடைக்கும்.
Also Read | கள்ளக்குறிச்சி: நல்லடக்கம் செய்யப்பட்டது மாணவியின் உடல்... கண்ணீரில் மூழ்கிய பெரியநெசலூர் கிராமம்..!
அதே போல, இந்த கடலுக்குள் ஏராளமான அற்புதங்களும், வியக்க வைக்கக் கூடிய ஏராளமான அதிசயங்களும் உள்ளே நிரம்பிக் கிடக்கிறது.
சமீப காலத்தில் கூட, மிக மிக அரிய வகை உயிரினங்களும் கடல் நீரில் இருந்து கண்டெட்டுக்கப்பட்டதை அறிந்து, ஆய்வாளர்கள் கூட மிரண்டு போயிருந்தனர்.
அப்படி சிக்கும் அரிய வகை உயிரினம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட, இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் வியந்து போகவும் வைத்து வருகிறது. இந்நிலையில் தான், கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் வலையில், திமிங்கலம் தொடர்பாக கிடைத்த பொருளும், அதற்கான மதிப்பும் பலரையும் வாயை பிளக்க செய்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் - விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், சுமார் 28.5 கிலோ கிராம் எடை கொண்ட திமிங்கலத்தின் வாந்தியை கடலில் இருந்து கண்டெடுத்துள்ளனர். திமிங்கலத்தின் வாந்தியில் என்ன இருக்க போகிறது என சிலருக்கும் தோன்றலாம். சர்வதேச அளவில், இந்த திமிங்கலத்தின் வாந்திக்கு மிக பெரிய அளவில் மார்கெட் உள்ளது. அதாவது, இந்த வாந்தியின் மூலம், வாசனை திரவியங்கள், மருந்துகள் மற்றும் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உருவாக்க பயன்படும் என்பதால், பல கோடி ரூபாய் வரை இதற்கு மதிப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, கேரள மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல வாந்தியும், சுமார் 28 கோடி ரூபாய் வரை மதிப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, தங்களுக்கு கிடைத்த திமிங்கல வாந்தியை கேரள கடலோர பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர், அதனை கேரள வனத் துறையினரிடம் காவலர்கள் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. "அம்பர்கிரிஸ்" என அழைக்கப்படும் திமிங்கல வாந்தி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள மீனவர்கள் வலையில் சிக்கி உள்ளது. அப்படி கிடைக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும் ஒரே ஒரு திமிங்கல வாந்தியால் திரும்பி உள்ளது குறித்த செய்திகளும் நிறைய வெளி வந்துள்ளது.
அதே வேளையில், இந்தியாவில் இந்த வகை திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று என்பதால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியாவில் அம்பர்கிரிஸ் விற்பனை என்பதும் சட்டப்படி குற்றமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | வீட்டு வாசல்ல சோர்வாக நின்ன கிளி.. காப்பாத்தியவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. கர்நாடகாவில் நடந்த சுவாரஸ்யம்..!
மற்ற செய்திகள்