Fifa WorldCup 2022 : கால்பந்து மேட்ச் பாக்க இப்படியா?.. 17 பேர் சேர்ந்து 23 லட்ச ரூபாயை திரட்டி.. உலகத்தையே திரும்பி பாக்க வெச்ச சேட்டன்கள்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகத்தாரில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நமது ஊரில் கிரிக்கெட் போட்டிகளை கொண்டாடுவது போல, கால்பந்து போட்டிகளையும் வெகு விமரிசையாக கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
அதிலும் குறிப்பாக, கேரள மாநிலத்தில் கால்பந்துக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளமே உள்ளது. கால்பந்து உலக கோப்பை தொடர்பான அறிவிப்பு வெளியான போதே தங்களுக்கு பிடித்தமான வீரர்களுக்கு பேனர் வைத்து அதனை பெரிய அளவில் ட்ரெண்ட் ஆக்கவும் செய்திருந்தனர்.
அந்த வகையில், தற்போது கேரளாவை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் சிலர் இணைந்து செய்துள்ள விஷயம, பெரிய அளவில் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
ஒவ்வொரு நிமிடமும் கால்பந்து போட்டி விறுவிறுப்பு நிறைந்து செல்லும் என்பதால், நேராக மைதானத்திற்கே சென்று கால்பந்து போட்டிகளையும் காணும் பழக்கம் பலரிடம் உள்ளது. இன்னொரு பக்கம், ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி வாயிலாக கால்பந்து போட்டிகளை கண்டுகளிப்பதும் வகையில் விறுவிறுப்பை அதிகரிக்கும்.
அப்படி ஒரு சூழலில், கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் முண்டக்காமுகல் என்னும் கிராமத்தை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வியப்பான விஷயம் ஒன்றை செய்துள்ளனர். அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் என மொத்தம் 17 பேர் சேர்ந்து கால்பந்து அணி ஒன்றை உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் க்ளப் தொடர்பான கால்பந்து போட்டிகளை கூட ஒன்று விடாமல் அவர்கள் பார்த்து ரசிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உலக கோப்பை கால்பந்து போட்டியை எந்த இடையூறும் இல்லாமல் பார்த்து ரசிக்கவும் அந்த 17 பேர் முடிவு செய்துள்ளனர். இதற்காக தங்களின் குடும்பத்தினரையும் இடையூறு செய்யாத வகையில் புது ரூட்டை பிடடித்த அவர்கள், கிராமத்தில் வீடு ஒன்றையும் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மொத்தம் 17 பேரும் இணைந்து 23 லட்சம் ரூபாய் சேர்த்து இந்த வீட்டை வாங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும், பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளின் கொடிகளையும் வண்ணம் அடித்துள்ள அவர்கள், மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்ட மேலும் சில வீரர்களின் கட் அவுட்டுகளையும் வைத்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பை போட்டியை நினைவான தருணமாக மாற்ற இப்படி ஒரு முயற்சியை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல., எதிர்காலத்தில் அவர்களது தலைமுறையினரும் இந்த கால்பந்து விளையாட்டை இந்த வீட்டின் மூலம் அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கால்பந்து போட்டிகளுக்காக ஒரு தனி வீட்டையே சில ரசிகர்கள் சேர்ந்து வாங்கியுள்ள சம்பவம், பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.
மற்ற செய்திகள்