மொத்தம் 1,487 கிராம் தங்கம்.. விமான ஊழியர் குறித்து கிடைத்த ரகசிய தகவல்.. சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் வைத்து விமான பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்தும் அதன் பின்னால் உள்ள காரணம் குறித்த தகவலும் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தம் 1,487 கிராம் தங்கம்.. விமான ஊழியர் குறித்து கிடைத்த ரகசிய தகவல்.. சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

                                                    Images are subject to © copyright to their respective owners

கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்த நபர், பிரபல விமானம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, சுமார் 1487 கிராம் தங்கத்தை அந்த ஊழியர் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஊழியர் பற்றி கிடைத்த ரகசிய தகவல்

பஹ்ரைன் - கோழிக்கோடு - கொச்சி சர்வீஸ் கேபின் க்ரூ உறுப்பினராக இருக்கும் அவர், தங்கம் கொண்டு வருவது பற்றி சுங்கத் தடுப்பு ஆணையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, சம்மந்தப்பட்ட ஊழியரை அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

அதன் படி, அந்த ஊழியரிடம் நடந்த சோதனையில், அவரது கைகளில் கட்டி வைக்கப்பட்டு தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. தங்கத்தினை கைகளில் சுற்றி கட்டிக் கொண்டு அதனை சட்டையின் கைப்பகுதியால் மூடிக் கொண்டு கடந்து செல்வதே அந்த ஊழியரின் நோக்கமாக இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

கைகளில் கட்டி இருந்த தங்கம்

அப்படி இருக்கையில் தான், அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து அந்த ஊழியரும் சிக்கி உள்ளார். அவரிடம் இத்தனை கிராம் தங்க நகை கடத்தியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர் ஒருவரே நகையை கையில் சுற்றி வைத்து கடத்திக் கொண்டு வர முயன்ற சம்பவம், கடும் பரபரப்பை விமான நிலையத்தில் ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாகவே தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை பயணிகள் உள்ளிட்டோர் கொண்டு வர முயலும் போது, சோதனையில் அதிகாரிகளிடம் சிக்கி விமான நிலையத்தில் உள்ள சக பயணிகள் மத்தியில் பதற்றத்தை உண்டு பண்ணுவதும் குறிப்பிடத்தக்கது.

AIRPORT

மற்ற செய்திகள்