'கமுக்கமா இருந்த யானை'...'திடீரென பக்தரின் சட்டையை உருவி'...வைரலாகும் திக் திக் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமைதியாக நின்று கொண்டிருந்த யானை திடீரென பக்தர் ஒருவரின் சட்டையை உருவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய பண்டிகைகளில் யானைகளின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அது போன்ற விழாக்களில் ஏராளமான யானைகள் பங்கேற்பது வழக்கம். அதே போன்று சில கோவில்களில் இருக்கும் கோவில் யானைகள், அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வாகும்.
அந்த வகையில் கோவிலில் நின்று கொண்டிருந்த யானை ஒன்று செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. அதை காண்போருக்கு திடீரென ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதில் வியப்பில்லை. அமைதியாக நின்று கொண்டிருந்த யானை திடீரென தன்னை கடந்து சென்ற பக்தர் ஒருவரின் சட்டையை தனது தும்பிக்கையை வைத்து பிடித்து இழுக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பக்தர் சுதாரிப்பதற்குள் யானையின் காலுக்கு மிக அருகில் சென்று விழுகிறார்.
இதையடுத்து அங்கிருந்த மற்ற பக்தர்கள் ஓடி வந்து அவரை ஆசுவாசப்படுத்தினார்கள். அந்த பக்தரோ அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
When an elephant don’t like your shirt..🤷🏻♂️ pic.twitter.com/mwSIgOYEeZ
— Pramod Madhav (@madhavpramod1) November 27, 2019