'இது உலகத்துலயே பழைய மீன் இனம்...' 'கேரளாவில் கண்டுபிடிச்சுருக்காங்க...' எப்படி மேல வந்துச்சு...? - ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் உள்ள நெல்வயல்களில் நன்னீர் மீன்களின் புதிய குடும்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே பழைய மீன் இனமாக கருதப்படுகிறது.
இது 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்கள் பிரிந்த காலத்திலேயே வாழ்ந்து வரும் மீனாக இந்த மீன் வகையினம் ஆய்வில் கருதப்படுகிறது.
ஐ.ஐ.எஸ்.இ.ஆர் ஆய்வு நிறுவனம், கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வு பல்கலைக்கழகம் கேரளாவில் உள்ள நிர்மலகிரி கல்லூரி, லண்டன் மற்றும் பெர்னியில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள், ஜெர்மனியின் செங்கன்பெர்க் இயற்கை வரலாற்றுத் தொகுப்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், புதிதாக கண்டறியப்பட்ட இந்த மீன் வகையினம் அனிக்மச்சன்னிடே என்னும் மீன் குடும்பத்தின் ஒருவகை என்று ஆய்வின் மூலம் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர்.
மேலும் சி.டி ஸ்கேன் மற்றும் விரிவான பகுப்பாய்வு மூலம் ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானக் குழுவானது, இந்த மீன் இனத்தின் தொன்மையான பண்புகளைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த மீன் இனம் மண்ணுக்கடியில் புதைந்து வசிக்கும் தன்மை உடையது என கண்டறியப்பட்டுள்ளது.
நீளமான உடலுடன் கூடிய இந்த மீன், கடந்த ஆண்டு வடக்கு கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் வயல்களில் சூரிய மறைந்த பிறகு மட்டுமே காணப்பட்டது.
கேரளாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன் இனத்தின் மற்றுமொரு முக்கியமான வேறுபாடு என்னவெனில், அது பூமிக்கு அடிப்பகுதியில் வாழ்கிறது. ஆனால் இதன் சகோதர இனங்கள் மேற்கு, மத்திய ஆப்பிரிக்கா கண்டத்திலும், ஆசியாவில் பொது மேற்பரப்பு நீர்நிலைகளிலும் வாழ்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் சுமார் 10 வகையான நிலத்தடி மீன் இனங்கள் இருப்பதாக அறியப்பட்டாலும், இங்கு அனிக்மச்சன்னிடே எவ்வாறு இங்கு வாழ்கிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. குறிப்பாக 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, நிலத்தடியிலிருந்து இந்த மீன் வெளிப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மற்ற செய்திகள்