"எங்களுக்கு 'கொரோனா' இருக்குதா...? அப்ப, இந்தாங்க... உங்களுக்கும் வரட்டும்...!" - 'டெஸ்ட்' பண்ண வந்த டாக்டர்'ஸ் மேல... இருமி இருமியே 'ஊர விட்டு' தொரத்தி இருக்காங்க!... அலறியடிச்சு 'ஓடிய' மருத்துவர்கள் - 'பரபரப்பு' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரள மாநிலத்தில் பதிவான போதும் அடுத்தடுத்து கேரள அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதிலும், குறிப்பாக திருவனந்தபுரத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. அதனால் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவனந்தபுரத்தை பூந்துரா என்னும் கிராமத்தில் சிலருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அங்குள்ள வேறு நபர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டி காரில் மருத்துவ குழுவினர் வந்துள்ளனர்.
இதற்கு அந்த கிராம மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காரை சூழ்ந்து கொண்ட சுமார் 70 பேர் காரை ஊருக்குள் விடாமல் வழிமறுத்துள்ளனர். சில தவறான பயன்படுத்திய ஊர் மக்கள், இங்கு யாருக்கும் கொரோனா இல்லை என்றும் அப்படி எங்களுக்கு கொரோனா இருந்தால் உங்களுக்கும் வரட்டும் என கூறி மருத்துவ குழுவினரின் முகத்தின் முன்பு இருமியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். மக்களின் நடவடிக்கையால் அங்கு சென்ற மருத்துவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, போலீசார் உதவியில்லாமல் அந்த கிராமத்திற்குள் நுழைய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றின் தீவிரம் அறியாமல் அப்பகுதி மக்கள் இப்படி நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்