கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட சந்தோஷமா வாழல.. அதுக்குள்ள வாழ்க்கைய சுக்குநூறாக உடைத்த நபர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாவயநாடு: கேரளாவில் புதிதாக திருமணம் ஆன தம்பதியினரை தீர்த்துக்கட்டிய வழக்கில் குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது.
2018-ஆம் ஆண்டு நடந்த திருமணம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயலில் என்ற பகுதியை சேர்ந்த உமர் (26 வயது) மற்றும் பாத்திமா (19 வயது) இருவருக்கும் 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற்றுள்ளது.
தம்பதிக்கு ஏற்பட்ட கொடுமை:
இந்த அன்பு தம்பதியர் வெலமுண்ட் பகுதியில் உள்ள புரிஞ்சியல்வயல் என்ற ஊரில் உள்ள வீட்டில் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர். இதற்கிடையில், ஆனால் அந்த சந்தோசம் ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. திருமணமான ஒருசில நாட்களில் உமர் மற்றும் பாத்திமா வீட்டில் கொடூரமான முறையில் இறந்து கிடந்தனர். கடந்த 2018 ஜூலை 6-ஆம் தேதி இந்த அன்பு ஜோடி தங்கள் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கபட்டது தெரிய வந்தது.
இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோழிக்கோட்டை சேர்ந்த கொலுங்கொட்டுமால் விஷ்வநாத் (48 வயது) என்பவரை கைது செய்து விசாரித்தனர். நகை, பணத்திற்காக உமர் மற்றும் பாத்திமா தம்பதி தங்கி இருந்த வீட்டிற்கு இரவு சென்ற திருடன் விஷ்வநாத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை:
அந்த நேரம் பார்த்து, தம்பதியர் கண் விழித்துக்கொண்டதால் இருவரையும் விஷ்வநாத் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த கொடூர சம்பவம், கொள்ளை தொடர்பாக மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
அதில், இந்த குற்ற சம்பவத்தில் விஷ்வநாத் தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, குற்றவாளி விஷ்வநாத்திற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டது. அதுமட்டுமல்லாமல், குற்றவாளி விஷ்வநாத்திற்கு 12 லட்ச ரூபாய் பணம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்