Oh My Dog
Anantham Mobile

கிரக பிரவேசம் முடிஞ்சு 2 நாள்தான் ஆச்சு.. புதுவீட்டுக்கு குடிபுகுந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுவீட்டுக்கு குடிபெயர்ந்த இரண்டே நாளில் தீ விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரக பிரவேசம் முடிஞ்சு 2 நாள்தான் ஆச்சு.. புதுவீட்டுக்கு குடிபுகுந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!

Also Read | மகன் இறந்த சோகத்தோடு களமிறங்கிய ரொனால்டோ.. கோல் அடிச்ச அப்பறம் செஞ்ச நெகிழ்ச்சியான காரியம்.. கலங்கிப்போன ரசிகர்கள்.!

கேரளா மாநிலம் இடுக்கி  மாவட்டத்தில் புற்றடி பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). இவரது மனைவி உஷா (வயது 45). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில் தாங்கள் புதிதாக கட்டிய வீட்டுக்கு கிரக பிரவேசம் செய்துள்ளனர். இதனை அடுத்து குடும்பத்துடன் அந்த வீட்டுக்கு குடிபுகுந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த தம்பதியினரின் மகள் ஸ்ரீதன்யா தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்துள்ளார். ஸ்ரீதன்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் எரிந்த தீயை அணைத்து ரவீந்திரன் மற்றும் உஷாவை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

 Kerala couple dies after house catches fire near Idukki

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது மகள் ஸ்ரீதன்யா பலத்த தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புது வீட்டுக்கு குடியேறிய இரண்டே நாளில் தீ விபத்தில் தம்பதி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KERALA, COUPLE, HOUSE, கேரளா மாநிலம், கிரக பிரவேசம்

மற்ற செய்திகள்