'நம்பினா நம்புங்க!'.. இதுவும் Pre-wedding Shoot தான்! பரவும் போட்டோஸ்.. ‘பட்டையை கிளப்பிய தம்பதி!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வித்தியாசமான தீமில் ரிபெட்டிங் போட்டோ ஷூட் நடத்தி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று உள்ளனர் கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றான திருமணம்.

'நம்பினா நம்புங்க!'.. இதுவும் Pre-wedding Shoot தான்! பரவும் போட்டோஸ்.. ‘பட்டையை கிளப்பிய தம்பதி!’

அத்தகைய திருமணத்தின் இத்தகைய மறக்கமுடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து வைத்து காலந்தோறும் கண்டு மகிழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அப்படித்தான் சமீப காலங்களில் திருமணத்துக்கு முன்பு என கூறப்படும் ப்ரீவெட்டிங் போட்டோக்களை திருமண தம்பதிகள் எடுத்து வருகின்றனர்.

Kerala Couple as Building workers viral pre wedding shoot

அதிலும் ஒவ்வொரு ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட்டும் பல தீம்களை வைத்து எடுக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் கேரளாவில் அண்மையில் கிளாமராகவும் மாடர்னாகவும் ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

Kerala Couple as Building workers viral pre wedding shoot

ஆனால் அதற்கு மாற்றாக செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், அண்மையில் எடுத்துள்ள ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் வைரல் ஆகியுள்ளது.  ஆண் பெண் இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் ப்ரீவெட்டிங் போட்டோஷூட்டில் திருமண தம்பதிகள் கட்டிடம் கட்டும் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களை போன்று காட்சி தருகின்றனர். இந்த போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்