மிக 'எளிமை'யான முறையில்... நடந்து முடிந்த 'முதல்வர்' வீட்டுக் 'கல்யாணம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோரின் திருமணம் இன்று திருவனந்தபுரத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.

மிக 'எளிமை'யான முறையில்... நடந்து முடிந்த 'முதல்வர்' வீட்டுக் 'கல்யாணம்'!

கொரோனா பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கேரள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமான கிளிஃப் ஹவுசில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் இரு தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். உறவினர்கள் தவிர, கேரளா தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராமன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் சஜீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மணமகன் முகமது ரியாஸ் ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அப்துல் காதரின் மகனாவர். ரியாஸ், சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI யின் தலைவராக கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, மணமக்கள் இருவருக்குமே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்