நிதி நிறுவனத்தில் நடந்த திருட்டு.. அதுக்கு முன்னாடியே திருடர்கள் பாத்த வேலை.. கூடவே அவங்க எழுதுன லெட்டர் தான் செம 'ஷாக்'
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, இந்திய நாட்டை பொறுத்தவரையில், எந்தவொரு நல்ல காரியமாக இருந்தாலும், அதனை செய்வதற்கு முன்பாக, பூஜை போன்ற நிகழ்வுகள் செய்து கொண்டு, தாங்கள் செய்யும் காரியங்கள் நல்லபடி நடக்கும் என வேண்டுவார்கள்.
அப்படி பூஜையை பயன்படுத்தி ஒரு வினோதமான சம்பவம் ஒன்று, கேரள மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை அடுத்த பதனாபுரம் என்னும் பகுதியில், தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
திருடுவதற்கு முன்..
இந்த நிறுவனத்துக்குள் நுழைந்த திருடர்கள், சுமார் 30 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் சுமார் 4 லட்ச ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதிலும், ஹைலைட்டாக அந்த திருடர்கள் பணம் மற்றும் நகையைத் திருடிக் கொண்டு செல்வதற்கு முன்பாக, வெற்றிலை மற்றும் மதுபானம் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை ஒன்று நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
நிதி நிறுவனத்தில் திருட்டு நிகழ்ந்தது பற்றி, அதன் உரிமையாளருக்கு தான் முதலில் தெரிய வந்துள்ளது. வழக்கம் போல, காலை 9 மணியளவில், தன்னுடைய அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்த நிலையில், லாக்கரில் இருந்த தங்க நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
குறிப்பில் இருந்த வார்த்தைகள்..
தொடர்ந்து, அவரும் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு லாக்கர் அருகே சில சடங்குகள் நடந்திருந்ததை கவனித்துள்ளனர். அங்கு மஞ்சள் நூல், சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்களும் இருக்க, ஒரு குறிப்பில், "நான் ஆபத்தானவன். என்னை பின் தொடராதே" என்றும் திருடர்கள் எழுதி வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, வங்கி இருந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு, கூரையை பிய்த்துக் கொண்டு திருடர்கள் இறங்கி இந்த திருட்டில் ஈடுபட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் குறித்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்