'கல்யாண நேரத்தில் வந்த ரிப்போர்ட்'... 'அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார்'... 'ஆனா மணமகள் சொன்ன வார்த்தை'... நெகிழ வைத்த திருமணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணமகனைப் பாதுகாப்பு கவசத்துடன் சென்று இளம்பெண் திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'கல்யாண நேரத்தில் வந்த ரிப்போர்ட்'... 'அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார்'... 'ஆனா மணமகள் சொன்ன வார்த்தை'... நெகிழ வைத்த திருமணம்!

இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை வீசி வருகிறார். கொரோனா அலையில் சிக்கி பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த கொரோனா நெருக்கடிக்கிடையிலும் பொதுமக்கள் பாதுகாப்பாகச் சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இன்று ஏராளமான முகூர்த்த நாட்கள். ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

Kerala : Bride wears PPE kit to marry COVID positive groom

கேரளாவைப் பொறுத்தவரை கொரோனா கட்டுப்பாடுகள் என்பது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு தம்பதிக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்த நிலையில், மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ். இதனால் ஆலப்புழா மெடிக்கல் காலேஜ்- மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Kerala : Bride wears PPE kit to marry COVID positive groom

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுவிட்டதே, என இருவீட்டாரும் கவலையடைந்தனர். ஆனால், மணமகள் என்ன இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் நாளில் திருமணம் நடைபெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சிகிச்சை பெற்று வரும் மணமகனைத் திருமணம் முடிக்க அனுமதி கேட்டுள்ளார். 

Kerala : Bride wears PPE kit to marry COVID positive groom

அவரும் அனுமதி கொடுக்க, மணமகள் இன்று பிபிஈ கிட் அணிந்து மருத்துவமனைக்கு வந்து மணமகனைத் திருமணம் செய்து கொண்டார். இவ்வளவு கடுமையான சூழ்நிலையிலும், மணமகள் உறுதியாக இருந்து மருத்துவமனைக்கே வந்து திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்