மகனின் உண்டியல் காசு எடுத்து லாட்டரி வாங்கிய ஆட்டோ டிரைவர்.. வாழ்க்கையவே தலைகீழா மாத்திடுச்சு! 25 கோடி வென்ற கதை
முகப்பு > செய்திகள் > இந்தியாமலேசியாவுக்குச் சமையல்காரராகப் பணிபுரியத் திட்டமிட்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் மகனின் உண்டியல் காசு எடுத்து லாட்டரி வாங்கி, கேரளாவில் ரூ.25 கோடி மதிப்பிலான ஓணம் பம்பர் லாட்டரியை வென்றுள்ளார்.
இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால், ஸ்ரீவரஹம் பகுதியைச் சேர்ந்த அனூப், வெற்றிக்கான டிக்கெட்டை - TJ 750605 - சனிக்கிழமை வாங்கினார். ஆனால் அது தனது முதல் தேர்வு அல்ல என்று கூறினார். அவர் தேர்ந்தெடுத்த முதல் டிக்கெட் பிடிக்கவில்லை, எனவே அவர் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தார், அது 25 கோடி ரூபாயை வென்றுள்ளது.
லோன் மற்றும் அவரது மலேசியா பயணம் குறித்து பேசிய அனூப், “கடன் தொடர்பாக இன்று வங்கி அழைத்தது, இனி எனக்கு அது தேவையில்லை என்று சொன்னேன். நானும் மலேசியா செல்லமாட்டேன்".
கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வரும் அவர், கடந்த காலங்களில் சில நூறுகள் முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரையிலான தொகையை வென்றுள்ளார். "நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, எனவே, நான் டிவியில் லாட்டரி முடிவுகளைப் பார்க்கவில்லை. இருப்பினும், எனது தொலைபேசியைச் சரிபார்த்தபோது, நான் வெற்றி பெற்றதைக் கண்டேன். என்னால் நம்ப முடியாமல் என் மனைவியிடம் காட்டினேன். அது வெற்றி எண் என்பதை உறுதி செய்தாள்,” என்றார்.
வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, அனூப் 15 கோடி ரூபாயை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். பணத்தை வைத்து என்ன செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, அவர் தனது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கட்டுவதும், அவர் செலுத்த வேண்டிய கடன்களை அடைப்பதும் தான் தனது முதல் முன்னுரிமை என்றார். அதுமட்டுமின்றி, அனூப் தனது உறவினர்களுக்கு உதவுவதாகவும், சில தொண்டு வேலைகளைச் செய்வதாகவும், கேரளாவில் உள்ள ஹோட்டல் துறையில் ஏதாவது தொழில் தொடங்குவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக கார்க்கி பவனில் நடைபெற்ற அதிர்ஷ்ட குலுக்கல் விழாவில் வெற்றி பெற்ற எண்ணை மாநில நிதியமைச்சர் கே என் பாலகோபால் அறிவித்தார்.
மற்ற செய்திகள்