FIFA World Cup 2022 : அர்ஜென்டினா தோற்றதால் கண்ணீர் விட்ட கேரள சிறுவன்.. வீடு தேடி வந்த அசத்தல் ஜாக்பாட்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய கிழக்கு நாடான கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருப்பதால், ரசிகர்களுக்கும் சிறந்த பொழுது போக்காக நடப்பு கால்பந்து உலக கோப்பைத் தொடர் இருந்து வருகிறது.
அதே போல, கால்பந்து போட்டிகளுக்கென்று சாதாரண ரசிகர்களாக இல்லாமல், ஒரு படி மேலே போய் பல வித்தியாசமான விஷயங்களையும் ரசிகர்கள் செய்து வருகின்றனர். இந்தியாவில் கால்பந்து போட்டிகளை அதிகம் பின்பற்றும் கேரளா மாநிலத்தில், உலக கோப்பை தொடர் நெருங்கும் சமயத்தில், மெஸ்ஸி, ரொனால்டினோ உள்ளிட்ட பிரபல கால்பந்து வீரர்களுக்கு கட் அவுட் வைத்திருந்தனர்.
அது மட்டுமில்லாமல், கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் உள்ள 17 பேர் சேர்ந்து கால்பந்து உலக கோப்பை போட்டிகளை காண 23 லட்சம் ரூபாய் செலவு செய்து புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்ததும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி இருந்தது. அதே போல, சமீபத்தில் கேரள பெண் ஒருவர் கார் மூலம் தனியாக கத்தார் வரை கால்பந்து போட்டியைக் காண சென்றிருந்ததும் அதிகம் வைரலாகி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் 13 வயதாகும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு அடித்துள்ள ஜாக்பாட் தொடர்பான செய்தி தற்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் நிப்ராஸ். 13 வயதாகும் இந்த சிறுவன் கால்பந்து விளையாட்டு போட்டியில் அர்ஜென்டினாவின் தீவிர ரசிகன் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சவூதி அரேபியா அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி அடைந்த சமயத்தில் சிறுவன் நிப்ராஸ் அழுவது தொடர்பான வீடியோ கால்பந்து பார்வையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது.
சிறு வயதிலேயே கால்பந்து போட்டியில் இந்த அளவுக்கு விருப்பத்தோடு பார்த்து கண்ணீரும் வடித்த காசர்கோடு சிறுவன் நிப்ராஸுக்கு, பையனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்மார்ட் டிராவல் நிறுவனம் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி சிறுவன் நிப்ராஸை, கத்தாரில் நடைபெறும் கால்பந்து தொடரில் அர்ஜென்டினா மோதவுள்ள போட்டியை காண அழைத்து செல்வதுடன் மட்டுமில்லாமல், மெஸ்ஸியை சிறுவன் சந்திக்க வைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | 51 வருடத்திற்கு பிறகு கிடைத்த மகள்.. துடைக்கப்பட்டது தாய் மீது விழுந்த பழி... பதற வைக்கும் சதி அம்பலம்!!
மற்ற செய்திகள்