'நான் பவர் பேங்க் தான் ஆர்டர் பண்ணினேன்...' 'ஆனா வந்தது அது இல்ல...' - டேக் செய்து போஸ்ட் போட்டவருக்கு அமேசான் கொடுத்த 'வாவ்' ரிப்ளை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் ரூ.1400-க்கு ஆர்டர் செய்யப்பட்ட பவர் பேங்க்கிற்கு பதிலாக ரூ.8000 மதிப்பிலான மொபைல் டெலிவரி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஒரு அதிர்ச்சியையும் அளித்துள்ளது அமேசான் நிறுவனம்.

'நான் பவர் பேங்க் தான் ஆர்டர் பண்ணினேன்...' 'ஆனா வந்தது அது இல்ல...' - டேக் செய்து போஸ்ட் போட்டவருக்கு அமேசான் கொடுத்த 'வாவ்' ரிப்ளை...!

கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர் நபில் நஷீத். இவர் ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று அமேசான் மூலம் ரூ.1400 மதிப்புள்ள  பவர் பேங்க்கை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் நபில் நஷீத்திற்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுகந்திர தினம் அன்று அமேசான் டெலிவரி செய்த பொருளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ரூ.1400 மதிப்புள்ள  பவர் பேங்க்கிற்கு பதில் நபில் நஷீத்திற்கு ரூ.8000 மதிப்புள்ள ரெட்மி டியோ மொபைல் தவறுதலாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது. வந்தவரை லாபம் என எண்ணாத நபில் தனது ட்விட்டரில் அமேசான் நிறுவனத்தை டேக் செய்து, 'சுகந்திர தினத்தன்று எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி, நான் பவர் பேங்க் தான் ஆர்டர் செய்தேன், எனக்கு ரெட்மி மொபைல் வந்துள்ளது, இதை நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்?' என பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட அமேசான் நிறுவனம் 'நீங்களே அதை உபயோகப்படுத்துங்கள் அல்லாது சுதந்திர தினத்திற்கு யாருக்காவது தானம் செய்யுங்கள்' என பதிலளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்