‘புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள்’.. ‘3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள்’.. ‘3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!

சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவியது. இதனை அடுத்து சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 எனக் கூறப்படுகிறது.

இதில் ஓமன் நாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய 45 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிவார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியில் இருந்து இந்தியா திரும்பிய 5 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.சைலாஜா தெரிவித்துள்ளார். இதில் 3 வயது குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு எர்ணாக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

KERALA, CORONAVIRUS, CHILD