நிறைய பணம் கிடைக்கணும்னு பூஜை.. நம்பி போன 2 பெண்களுக்கு நடந்த விபரீதம்.. விசாரணையில் போலீசுக்கு வந்த சந்தேகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தையே உலுக்கியுள்ள இரண்டு பெண்களின் கொலை வழக்கில், காவல்துறையினருக்கு புதிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு பெண்கள்
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த ரோஸ்லின் அங்கே லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். அவர் வசித்துவந்த இடத்திற்கு அருகே தமிழகத்தை சேர்ந்த பத்மா எனும் பெண்ணும் லாட்டரி விற்பனை செய்துவந்ததாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவருமே காணாமல்போன நிலையில், இருவீட்டாரும் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கைது
முதலில் இரு பெண்களுக்கும் போன் செய்திருந்த முகமது ஷபி என்பவரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் பண சிக்கல் தீர சிறப்பு பூஜை செய்ததும் அதில் இரு பெண்களையும் பலி கொடுத்ததும் காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகம்
இந்நிலையில், இதுகுறித்து பேசிய கொச்சி காவல்துறை அதிகாரிகள்," இரு பெண்களுமே பணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் ரோஸ்லின் ஜூன் மாதம் கொல்லப்பட்டுள்ளார். பத்மா செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.
இதனிடையே வேறு ஒரு வழக்கை விசாரிக்கும் போது இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன்,"மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும், அரசின் கவனக்குறைவையும் நீதிமன்றம் கவனித்துவருகிறது. இந்த செயல் கேரளாவில் நடந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மனிதரின் பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வி எழுகிறது மேலும் இத்தகைய சம்பவங்கள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளன" என்றார்.
மற்ற செய்திகள்