Unknown Number-ல் இருந்து வந்த மெசேஜ்.. ரிப்ளை செய்யாத 'டாக்டர்'.. அடுத்து போட்டோவுடன் இளம் பெண் அனுப்பிய மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது வாட்ஸ்அப்பிற்கு மிரட்டல் மெசேஜ் வந்திருந்த நிலையில், அதன் பிறகு மருத்துவர் எடுத்த நடவடிக்கையை குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Unknown Number-ல் இருந்து வந்த மெசேஜ்.. ரிப்ளை செய்யாத 'டாக்டர்'.. அடுத்து போட்டோவுடன் இளம் பெண் அனுப்பிய மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன?

பெட்ரோல் போட பைக்கை திருப்பியபோது.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. சாமி கும்பிடப் போன தம்பதிக்கு நடந்த சோகம்.!

கேரள மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (வயது 32). அதே பகுதியில் இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ஷாநவாஸின் எண்ணிற்கு, முன்பின் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து, வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்து மெசேஜ் வந்துள்ளது.

மிரட்டல்

தெரியாத  எண்ணில் இருந்து மெசேஜ்  வந்ததால், முதலில் மருத்துவர் ஷாநவாஸ் பதிலளிக்கவில்லை. ஆனால், தொடர்ந்து அதே எண்ணில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், ஒரு குறிப்பிட்ட பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள், மெசேஜ்ஜாக வந்துள்ளது. இதனைத் தாண்டி, அந்த டாக்டரை மிரட்டி, பணம் கேட்கவும் ஆரம்பித்துள்ளனர். மேலும், பணம் தராமல் போனால், உங்கள் மீது போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்படும் என்றும், டாக்டர் ஷாநவாஸை மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து தொல்லை

தன்னை மிரட்டிய மர்ம நபரிடம் பணம் கொடுக்க டாக்டர் மறுக்கவே, வெளிநாட்டில் இருந்து இணைய அழைப்பில் ஒருவர், ஷாநவாஸிற்கு அழைத்து பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, தனக்கு தொல்லை வந்து கொண்டே இருந்ததால், போலீசாரை தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளார் மருத்துவர் ஷாநவாஸ்.

போலீசார் வைத்த பொறி

அதன்படி, கடந்த சில தினங்களாக, டாக்டரின் வாட்ஸ்அப்பை போலீசார் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது, மண்ணுட்டி என்னும் பகுதியைச் சேர்ந்த நௌஃபியா மற்றும் வேறு ஒரு நபர் 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். அந்த மெஸேஜிற்கு பதிலளித்த போலீசார், பணத்தைத் தருவதாக ஒப்புக் கொண்டு, மிரட்டல் கும்பலுக்கு பொறி ஒன்றை வைத்துள்ளனர்.

அதிரடி திட்டம்

அந்த பணத்தினை வாங்க, பெங்களூரில் இருந்து பெண் வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பெங்களூரில் பிட்னஸ் டிரைனரான நிஷா என்பவர், திரிச்சூருக்கு வந்து, டாக்டர் ஷாநவாஸை தொடர்பு கொண்டுள்ளார். பணம் வசூலிக்கும் இடம் குறித்த தகவலை போலீசார் அந்த பெண்ணிடம் தெரிவிக்க, மகளிர் காவல் துறையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோருடன் அந்த பெண்ணை பிடிக்க களமிறங்கியுள்ளனர்.

kerala 2 women held over extortion bid against doctor

போன் அழைப்பு

டாக்டர் கார் அருகே பெண் வந்ததும், போலீசார் அவரை மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர், நிஷாவை காவல் நிலையம் அழைத்து செல்லும் போது, அவரின் மொபைல் போனிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. சந்தேகத்தின் பெயரில், அவரை ஸ்பீக்கர் போட்டு பேச போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

இரு பெண்கள் கைது

அப்போது அழைத்திருந்த நௌஃபியா, "3 லட்சம் ரூபாய் எங்கே?. தப்பி ஓட முயற்சி செய்யாதே. என்னிடம் வந்து கொடு" என நிஷாவை மிரட்டியுள்ளார். நௌஃபியாவை பிடிக்க, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி, நிஷாவை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அப்படி வர செய்து, நௌஃபியாவையும் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பெரிய நெட்வொர்க்?

இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்த நிலையில், வெளிநாட்டில் இருந்து அழைப்பு விடுத்த நபர் பற்றி போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

பண வசதி உடைய ஆட்களை குறி வைத்து, ஈடுபட்ட கும்பலிடம் இருந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையால், டாக்டர் ஷாநவாஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கும்பலை மாட்ட வைத்துள்ளார். இந்த கும்பல், இதற்கு முன்பு யாரையாவது இப்படி ஏமாற்றியுள்ளார்களா? அல்லது இவர்களின் நெட்வொர்க் இன்னும் பெரிதாக இருக்குமா என்பது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதின் தலைக்கு விலை.. ரஷ்ய தொழிலதிபர் செய்த காரியம்..என்ன நடக்கப்போகுதோ..?

KERALA, WOMEN, EXTORTION BID, DOCTOR, UNKNOWN NUMBER, மெசேஜ், டாக்டர், கேரள மாநிலம், பெண்

மற்ற செய்திகள்