'மீன் வறுவல் மட்டும் இல்ல'... 'கொரோனா பாதித்தவர்களுக்கு அசர வைக்கும் மெனு'... கலக்கும் கேரளா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சத்துள்ள உணவுகள் வழங்கப்படுகிறது. அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'மீன் வறுவல் மட்டும் இல்ல'... 'கொரோனா பாதித்தவர்களுக்கு அசர வைக்கும் மெனு'... கலக்கும் கேரளா!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை அவரது உறவினர்கள் உட்பட யாரும் சந்திக்க முடியாது என்பதால், அவர்கள் மனதளவில் சோர்ந்து போகக்கூடாது என்பதற்காக ஆறுதல் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விசே‌ஷ உணவுகளும் வழங்கப்படுகிறது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, சாம்பார், 2 அவித்த முட்டை, 2 ஆரஞ்சு பழங்கள், டீ மற்றும் ஒரு பாட்டில் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பழச்சாறு வழங்கப்படும்.

மதிய உணவில் சப்பாத்தி, பொறித்த மீன் மற்றும் கேரள உணவு வகைகள் இடம்பெற்றுள்ளது. மாலையில் பிஸ்கெட், டீயும், இரவு அப்பம், 2 வாழைப்பழங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தனி உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு காலை 2 அவித்த முட்டை, சூப், பழச்சாறு ஆகியவை வழங்கப்படுகிறது.

சிறிது நேர இடைவெளிக்கு பிறகு அன்னாசி பழச்சாறு வழங்கப்படும். பகல் உணவாக ரொட்டி, வெண்ணை மற்றும் பழங்களும், இரவில் ரொட்டி, முட்டை பொறியல், பழங்கள் வழங்கப்படுகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த தகவலை எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

KERALA, COVID-19, CORONAVIRUS, ERNAKULAM DISTRICT COLLECTOR