‘குழிக்குள் இருந்து வந்த பாம்பு’! ‘திடீரென நீல நிறமாக மாறிய கால்’!.. 5ம் வகுப்பு மாணவிக்கு வகுப்பறையில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் வகுப்பறையில் பாம்பு கடித்து 5ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சுல்தான்பத்தேரி அருகே உள்ள புத்தன்குந்து பகுதியை சேர்ந்தவர் அப்து அஸீஸ். இவரது மகள் ஷஹ்லா ஷெரின் (10). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது ஷஹ்லா ஷெரினின் காலில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உடனே ஆசிரியையிடம் தனது காலில் ரத்தம் வருவதாக மாணவி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆசிரியை அலட்சியமாக பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மாணவியின் கால் நீல நிறமாக மாறியுள்ளது. இதனை அடுத்து உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் வரும்வரை மாணவியை பள்ளியிலேயே இருக்க வைத்துள்ளனர். விரைந்து வந்த மாணவியின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்களுக்கு என்ன கடித்தது என்ற கண்டறியமுடியததால் உடனே கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சிறுது தூரம் சென்றதும் மாணவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனே அனுமதித்துள்ளனர். அங்கு மாணவிக்கு பாம்பு கடித்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவி உயிரிழந்ததற்கு பள்ளியின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் மாணவி அமர்ந்திருந்த இடத்தில் சிறிய ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் பாம்பு கடித்து 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாம்பு கடித்து இறந்த மாணவியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
News Credits: NDTV