சிறுநகர, கிராம மக்களுக்கு தரமான சிகிச்சை.. ரெடிங்டன் ஃபவுண்டேஷன் & காவேரி மருத்துவமனை தொடங்கிய புதிய முன்னெடுப்பு.!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறுநகரங்களிலும், கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்கு தரமான உடல்நல சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவதற்கான ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்புறுதி (CSR) செயல்திட்டமாக ரெடிங்டன் ஃபவுண்டேஷன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து தொடங்கும் தொலைதொடர்பு மருத்துவ ஆலோசனை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: 25 நவம்பர் 2022: ரெடிங்டன் இந்தியா லிமிடெட்டின் பெருநிறுவன சமூகப் பொறுப்புறுதி பிரிவான ரெடிங்டன் ஃபவுண்டேஷன் மற்றும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை ஆகிய இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கவரைப்பேட்டை என்ற ஊரில் ஒரு தொலைதொடர்பு மருத்துவ ஆலோசனை மையத்தை (டெலிமெடிசின் சென்டர்) தொடங்கியிருக்கின்றனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றி வசிக்கும், அதுவும் குறிப்பாக நகரங்களை விட்டு தள்ளி இருக்கின்ற கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான உடல்நல சிகிச்சைக்கான வசதியினை இம்மையம் வழங்கும்.
இந்த தொலை மருத்துவ முனைப்புத் திட்டத்தின் வழியாக பல்வேறு நோய் பாதிப்பு நிலைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளை இந்த மையத்திற்கு வருகை தரும் மக்கள் பெறமுடியும். சிறப்பு நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களோடு வீடியோ கான்ஃபரன்சிங் கலந்துரையாடல் மூலம் தொடர்புகொண்டு மக்கள் மருத்துவ ஆலோசனைப் பெறுவதை இந்த மையம் ஏதுவாக்குகிறது. தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த முன்னேற்றங்களின் காரணமாக, கடந்த சில ஆண்டுகள் கால அளவில் டெலிமெடிசின் என அழைக்கப்படும் தொலைமருத்துவ துறை, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கிறது. உயர்தர மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அணுகும் வசதி இல்லாமல், நகரங்களை விட்டு தள்ளி, தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு பயண தூரத்தைக் குறைக்க இந்த திட்டம் உதவுகிறது.
இதயவியல், நுரையீரலியல், நீரிழிவியல். பொது மருத்துவம், சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர் பாதையியல் ஆகியவற்றோடு தொடர்புடைய பல்வேறு நோய் பாதிப்பு நிலைகள் மீது அனுபவமும், நிபுணத்தும் மிக்க சிறந்த மருத்துவர்களிடமிருந்து மறு கருத்தினைப் பெறுவதற்கும் இம்மையம் நோயாளிகளுக்கு உதவும். இம்மையத்தின் மூலம் மருத்துவர்களது ஆலோசனையைப் பெறும் நோயாளிகள், இங்கு அமையப் பெற்றிருக்கும் மருந்தகத்தின் வழியாக மருந்துகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இம்மையத்தின் தொடக்கவிழா நிகழ்வின்போது உரையாற்றிய கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் T.J.கோவிந்தராஜன் கூறும்போது, “கடந்த பத்து ஆண்டு காலஅளவின்போது டிஜிட்டல் செயல்முறை அடிப்படையிலான உடல்நல பராமரிப்பு சேவை ஏராளமான முன்னேற்றங்களை கண்டிருக்கிறது. தரமான சிகிச்சைக்கான வசதியை மக்கள் பெறுவதற்கு இந்த டிஜிட்டல்மைய செயல்பாடுகள் உதவியிருக்கின்றன. எங்களது சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த சிறப்பான முனைப்புத்திட்டத்தின் மூலம் இங்கு கிடைக்கக்கூடிய சமூக உடல்நல பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும். இப்பகுதியைச் சுற்றி வாழும் சமூகத்தினர் அனைவருக்கும் இச்செயல்திட்டம், பெரும் பயனளிக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னை, காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசும்போது, “இந்த தொலைதொடர்பு மருத்துவ ஆலோசனை மையத்தின் வழியாக தரமான சிகிச்சை மற்றும் உடல்நல பராமரிப்பு அவசியமாக இருக்கிற புற நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களை எமது சேவை சென்றடைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூக சுகாதார பராமரிப்பு மீது கவனம் செலுத்துகின்ற ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்புறுதி செயல்திட்டமாக பெருநிறுவனங்கள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வதை நான் மனமார பாராட்டுகிறேன். ரெடிங்டன் ஃபவுண்டேஷனுடனான எமது இந்த ஒத்துழைப்பு செயல்பாட்டின் வழியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இம்மையத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு சிறப்பு பிரிவுகளில் உயர்தர சிகிச்சையை நாங்கள் வழங்கவிருக்கிறோம்,” என்று கூறினார்.
மற்ற செய்திகள்