"நீ ஜெயிச்சிட்டே மாறா.." 11 வருஷ உழைப்பு.. மெய் சிலிர்க்க வைத்த கணித ஆசிரியர்.. குவியும் பாராட்டு
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போதைய காலக்கட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை கொண்டு வாகனங்கள் இயங்கி வரும் நிலையில், தற்போது அடுத்த கட்டமாக, எலக்ட்ரிக் உள்ளிட்ட மாற்று சக்தி கொண்டும் வாகனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
Also Read | விபத்தில் பறிபோன கை.. "ஆனாலும் கொஞ்சம் கூட ஒடஞ்சு போகலேயே.." 80 வயதிலும் மிரள வைக்கும் முதியவர்..
இந்நிலையில், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர், உருவாக்கியுள்ள கார் ஒன்று, பல தரப்பில் இருந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம்
காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியை அடுத்த சனத் நகர் என்னும் இடத்தைச் சேர்ந்தவர் பிலால் அகமது. கணித ஆசிரியரான இவர், சிறு வயது முதலே ஆட்டோமொபைல் பிரிவில் அதிக ஆர்வமாக இருந்து வந்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த ஆர்வம், நாளுக்கு நாள் அதிகரிக்கவே, கடைசியில் சொந்தமாக ஒரு காரை உருவாக்க வேண்டுமென்ற முடிவுக்கும் பிலால் வந்துள்ளார்.
11 ஆண்டுகள் நடந்த சோதனை
அதன்படி, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக, மாருதி சுசுகி கார் ஒன்றை வாங்கியுள்ளார் பிலால் அகமது. பின்னர், இந்த காரை சூரிய சக்தி மூலம் இயங்க வைப்பதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக, சுமார் 11 ஆண்டுகளாக தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் முயற்சிகளை மேற்கொண்டு, கடைசியில் வெற்றியும் கண்டுள்ளார்.
காரின் நாலாபக்கமும், சோலார் பேனல்களை பொருத்தி, அந்த மின்சக்தி மூலம் இயங்கும் காரை வடிவமைத்துள்ளார். மேலும், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள், மிகக் குறைந்த சூரிய சக்தி மூலம், அதிக மின் சக்தியை உருவாக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதே போல, இந்த காருக்குள் சார்ஜிங் பைன் இருப்பதற்கான வசதிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் வெளியான பல கார்களின் அடிப்படையைக் கொண்டு, இது தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை கவனித்து, முயற்சி மற்றும் சோதனைகள் என இறங்கி, அதில் தற்போது வெற்றியையும் அடைந்துள்ளார் பிலால் அகமது.
வைரலாகும் சோலார் கார்
இது குறித்து பேசும் பிலால், "ஆரம்பத்தில் நான் மாற்றுத்திறனாளிகளுக்கான காரை உருவாக்க விரும்பினேன். ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக, என்னால் அது முடியாமல் போனது. இதன் பின்னர் தான், சோலார் காரை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான முயற்சியிலும் நான் இறங்கினேன். அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளேன். எனக்கு யாரும் எந்த ஒரு நிதி உதவியும் செய்யவில்லை. அப்படி எனக்கு தேவையான நிதியும் ஆதரவும் கிடைத்திருந்தால், ஒருவேளை நான் காஷ்மீரின் எலான் மஸ்க்காக கூட மாறி இருப்பேன் " என பிலால் அகமது தெரிவித்துள்ளார்.
சுமார் 11 ஆண்டுகள், ஏராளமான சோதனைகளையும், முயற்சிகளையும், கடின உழைப்பையும் போட்டு, அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ள பிலால் அகமதை, முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் பாராட்டி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
தனது சோலார் காருடன் பிலால் நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | திருமணத்தில் முடிந்த 2 வருட காதல்.. அடுத்த 45 நாளுல அரங்கேறிய ட்விஸ்ட்.. மாப்பிள்ளை வீட்டில் பரபரப்பு
மற்ற செய்திகள்